திரைத்துறையில் நடிகைகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை, கதைக்கு என்ன தேவையோ அதையே தாங்கள் செய்து வருகிறோம் எனவும் நடிகை அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.
கோவை ராஜவீதி பகுதியில் உள்ள பிரபல சுமங்கலி தங்க நகை விற்பனை நிறுவனத்துடன் - சர்வதேச வைர வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகை அதுல்யா ரவி, புதிய வடிவமைப்பிலான வைர நகைகளை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து அவர் கூறியதாவது; பெரும்பாலான பெண்களுக்கு வைரம் பிடிக்கும். எந்த ஒரு விழா என்றாலும் வைர நகை அணியும் போது பெண்கள் ராணி போன்று இருப்பார்கள்.
தனது நடிப்பில் இதுவரை இரண்டு மூன்று படங்கள் வெளியாகி உள்ளதாகவும் தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருவதாகவும், தமிழிலும் தான் நடித்த ஒரு படம் விரைவில் வெளியாக உள்ளது எனவும் கூறினார்.
நடிகைகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்ற கருத்து தவறானது, கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்து வருகிறோம்.
திரைப்படங்களில் நடிகைகளின் நிறத்தில் எந்த பாகுபாடும் இல்லை. நல்ல கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவும் குறிப்பிட்டார் அதுல்யா ரவி.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“