விஜயுடன் மோதும் அட்லி
வாரிசு படத்திற்கு பிறகு விஜய் அடுத்து லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலமுக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் மாதம் லியோ படம் வெளியாக உள்ளது. இதனிடையே விஜயின் தீவிர ரசிகரான அட்லி இயக்கி வரும் ஜவான் படமும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலீசுக்கு முன்பே பட்ஜெட்டை மீறிய வசூல்
சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மண்டேலா படத்தின் இயக்குனர் மடேன் அஸ்வின் இந்த படத்தை இயக்கி வருகிறார். 18 கோடியில் தயாராகி வரும் இந்த படம் தற்போது டிஜிட்டல் டிவி உரிமம் உள்ளிட்ட ப்ரீ ரிலீசில் 83 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் என்ன?
BREAKING : #Dhanush & #AishwaryaRajinikanth officially applied for “ DIVORCE ” in Chennai Civil Court. Dhanush cheated on Aishwarya for another woman. Sad for the Couple !! pic.twitter.com/KntoVQVXWH
— Umair Sandhu (@UmairSandu) March 14, 2023
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த ஆண்டு திடீரென தங்களது திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், சென்சார் குழுவில் உள்ள உமைர் சந்து என்பவர் தனுஷின் தவறான உறவால் தான் இருவரும் பிரிந்துவிட்டனர் என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வதந்திகளை பரப்பாதீர்கள் அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி கடைசி படத்தின் புதிய அப்டேட்
தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராக உள்ள நிலையில், அவர் கடைசியாக நடித்த மாமன்னன் படம் விரைவில் வெளியாக உள்ளது. வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் டிஜிட்டல் உரிமம் 23 கோடி ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, உதயநிதி படத்தின் டிஜிட்டல் உரிமம் இவ்வளவு கோடிக்கு விலை போனது இதுவே முதல் முறை.
அதிரடியை கையில் எடுத்த கமல்ஹாசன்
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிற்கு பட தயாரிப்பில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் அடுத்து தயாரிக்கும் படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் ரோலக்ஸாக வந்து மிரட்டிய சூர்யாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil