scorecardresearch

அவதாருக்கு ரெட் சிக்னல் காட்டிய தமிழக தியேட்டர்கள்: காரணம் இதுதானாம்!

தற்போது 13 வருடங்களுக்கு பிறகு அவதார் படத்தின் 2-ம் பாகமாக அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் இன்று வெளியாகியுள்ளது.

அவதாருக்கு ரெட் சிக்னல் காட்டிய தமிழக தியேட்டர்கள்: காரணம் இதுதானாம்!

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று வெளியான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், தமிழகத்தில் படத்திற்கு அதிகப்படியான தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை.  

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் அவதார். உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை பெற்றது. தற்போது 13 வருடங்களுக்கு பிறகு அவதார் படத்தின் 2-ம் பாகமாக அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் இன்று வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் முதல் பாகத்தை போலவே பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில்,  வருமானப் பகிர்வு விதிமுறைகள் தொடர்பாக டிஸ்னி நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு  காரணமாக அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

திரைப்படத்தின் மொத்த வருமானத்தில் 70% சதவீத பங்கு அவதார் தயாரிப்பு நிறுவனம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஒரு ஹாலிவுட் படத்திற்காக இவ்வளவு சதவீத பகிர்வு கொடுக்கப்படவில்லை. ஆனாலும் பல திரையரங்குகள் இதற்கு ஒப்புக்கொண்டாலும் சில திரையரங்குகள் 65% வரை குறைக்க முன்வந்தது. வருவாயில் 60% பகிர்ந்து கொள்ள முன்வந்தோம். ஆனால் டிஸ்னி 70% கேட்டார்கள். இது சாத்தியமில்லை என்பதால் விலகிவிட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சுமார் 300 திரைகளில் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டு அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் வெளியாகியுள்ளது. சுமார் 70 திரையரங்குகள் கொடுக்கத் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட 20% திரையரங்குகள் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தை வெளியிட மிகவும் ஆர்வமாக இருந்தாலும் வருமான பகிர்வு ஒப்பந்தம் காரணமாக படத்தை வெளியிடுவதில்லை.

மேலும்“சிங்கிள் ஸ்கிரீன்கள் மற்றும் டூ ஸ்கிரீன் தியேட்டர்கள் மட்டுமல்ல, மல்டிபிளக்ஸ்கள் கூட இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளன, இதனால் அந்த 70 தியேட்டர்களில் இந்த படம் வெளியாகவில்லை. 300 திரையரங்குகள் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட பிறகு, மற்ற திரையரங்குகள் ஏன் இதைப் பின்பற்ற முடியாது என்று தயாரிப்பு நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதேபோல் இந்த நிலை மாறி “டிஸ்னி மனந்திரும்பும் மற்றும் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் வெளியிட முடியும் என்ற நம்பிக்கையில் பல திரையரங்குகள் தயார் நிலையில் உள்ளன. அதனால் இன்று காலை அவர்கள் வேறு எந்தப் படங்களையும் திரையிடவில்லை. பிற்பகலில் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால், அவர்கள் ஹோல்டோவர் வெளியீடுகளை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.”

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் டிக்கெட் விற்பனை நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகம் உள்ள தமிழ்நாட்டில்தான் ஸ்டுடியோவால் இந்த விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த படத்திற்காக பல திரையரங்குகள் தங்கள் திரைகளை மேம்படுத்திய நிலையிலும் அவதார் படத்தை  அவர்களால் அதை திரையிட முடியாமல் போனது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema avatar wont release 70 theatres in tamilnadu

Best of Express