67-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த படமாக அசுரன்

National Award : 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Cinema 67th National Award : 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த படமாக அசுரன் படம் தேர்வாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1954-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விருது பரிந்துரைக்குழு சிறந்த படங்களை தேர்வு செய்யும். நாட்டில் உள்ள பல்வேறு மொழி திரைப்படங்களில் இருந்து தேர்தவு செய்யப்படும் சிறந்த படங்களை மக்களுக்காக திரையிடப்படும். மேலும் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்படும் படங்களுக்கு இந்தியாவின் குடியரசு தலைவர் விருது வழங்குவார்.

இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குநர், சிறந்த மனமகிழ்ச்சி தரும் படம், சிறந்த குழற்தைகளுக்கான படம் ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் வழங்கப்படும் இந்த விருது வழங்கும் விழா கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக  நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனாவின் வீரியம் ஒருசில மாநிலங்களில் அதிகரித்தாலும், சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், 2019-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த படம் அசுரன், சிறந்த நடிகர் தனுஷ் (அசுரன்)

இதில் தமிழில் சிறந்த படமாக அசுரன் படம் தேர்வாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் வெளியான இந்த படம் எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்டது. வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் உருவான 4-வது படமான இந்த படத்தில், சாதிய கொடுமைகளை வலிமையாக எடுத்துரைக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் தனுஷ் இளமை மற்றும் முதுமை என இரண்டு வகையான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வாரி குறித்துள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படம் ஜப்பான் திரைப்பட விழாவில் தரையிட தேர்வானது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தனுஷ் வெற்றி மாறன் கூட்டணியில் உருவான 2-வது படமான ஆடுகளம் படத்திற்காக தனுஷ் தேசிய விருது வழங்கப்பட்ட நிலையில், தற்போது அரசுரன் படத்திற்கு 2-வது முறையாக தேசிய விருது வாங்கியுள்ளார்.

ஒத்த செருப்பு சைஸ் 7

பார்த்திபன் எழுதி இயக்கி அவர் மட்டுமே நடித்திருந்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக உருவான இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே திரையில் தோன்றியிருப்பார். மற்ற கதாப்பாத்திரங்கள் வெறும் குரல்களாக மட்டுமே தோன்றிய இந்த படம் புதுச்சேரி திரைப்பட் விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்திற்கு சிறந்த ஒலிகலவை மற்றும் சிறநத் ஜூரி என இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் டி.இமான்

கடந்த 2019-ம் ஆண்டு அஜித்குமார் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கதில் வெளியான படம் விஸ்வாசம். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தந்தை மகள் இடையேயான பாசப்போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பபெறும் கண்ணான கண்னே பாடல் பட்டித்தொட்டி எல்லாம் பெரும் வைலானது. இதன் மூலம் இந்த படத்திற்கு இசையமைத்த டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகர் விஜய் சேதுபதி

கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், ஆகியோர் முக்கிய கதாப்பாத்தித்தில் நடித்த இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக தனது சிறந்த நடிப்பை வெளியிப்படுத்தியிருந்தார். இதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema award 67th national award for tamil movies

Next Story
ஷகிலா இமேஜை மாற்றிய குக் வித் கோமாளி: உருக்கமாக பேசி விடைபெற்றார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com