தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன் தனுஷூன் 3 படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர், தொடர்ந்து மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காங்கிச்சட்டை, ரஜினிமுருகன், டான், டாக்டர் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சிவகார்த்திகேயனின் 100 கோடி கலெக்ஷன் கிளப்பில் இணைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் தயாராகி வரும் நிலையில், ஏற்கனவே இவர் நடித்து வந்த அயலான் படம் விரைவில் வெளியாக உள்ளது.
பேண்டஸி என்டர்டெய்னர் பாணியில் தயாராகியுள்ள அயலான் படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்கியுள்ளார்.
24AM ஸ்டுடியோஸ் ஆர்.டி ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் அயலான் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கேஜேஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் பெற்றுள்ளார்.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயலான் 2023 தீபாவளி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்..“இந்தப் படத்தில் எங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் செலுத்தியுள்ளோம். வழியில் சில தடைகள் இருந்தாலும், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக முன்னேறி வருகிறோம். இந்த தடைகளுக்குப் பிறகு, எங்கள் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ”
Let’s fly high this diwali! 💥#AyalaanFromDiwali2023 👽🌟#Ayalaan@Ravikumar_Dir @arrahman @kjr_studios @24amstudios @Phantomfxstudio @Rakulpreet @ishakonnects @SharadK7 @iYogiBabu #Karunakaran #Niravshah @AntonyLRuben @muthurajthangvl @anbariv @SOUNDARBAIRAVI… pic.twitter.com/1EwMe02EUR
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 24, 2023
“அயலான் உடன், நாங்கள் தரத்தில் சமரசம் செய்ய விரும்பவில்லை, ஏனெனில் இது ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கான அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும். எனவே இந்த படத்தை முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி உருவாக்க எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது, ”என்று அது கூறியது.
சிவகார்த்திகேயன் ரகுல் பிரீத் சிங்குடன், கருணாகரன், யோகி பாபு, ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா மற்றும் பாலசரவணன் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil