New Update
/indian-express-tamil/media/media_files/3pQtorRWZbk8ltVMP7In.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
கோபியின் மனைவி ராதிகாவும், பாக்யாவுக்கு சப்போட்டாக களமிறங்க, ஈஸ்வரி கோபி இருவருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எப்சோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே தற்போது வெளியாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரமோ ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, தனது மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்து கொண்டாலும் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கிறார். அதே சமயம் தனது பிஸினஸில் மேலும் வளர்ந்து வரும் பாக்யா அவ்வப்போது சறுக்கலையும் சந்தித்து வருகிறார். ஆனாலும் அவர் பிஸினஸ் செய்வது கோபிக்கு உறுத்தலாகவே உள்ளது.
இதனிடையே தற்போது கோபியின் மனைவி ராதிகாவும், பாக்யாவுக்கு சப்போட்டாக களமிறங்க, ஈஸ்வரி கோபி இருவருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. தற்போது பொருட்காட்சியில் பாக்யா கேண்டீன் திறந்துள்ளார். இந்த திறப்பு விழாவிற்கு அனைவரையும் அழைத்துள்ள நிலையில், ராதிகாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பாக்யாவின் இந்த அழைப்பு ராதிகாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் கேண்டீன் திறப்பு விழாவில் பழனிச்சாமி பாக்யா, அனைவரும் இருக்க, ராதிகா அங்கே வருகிறார். அவரை வரவேற்கும் பாக்யா, வாங்க வாங்க நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் என்று சொல்கிறார். அதன்பிறகு பாக்யாவிடம் பேசிக்கொண்டிருக்கும் பழனிச்சாமி, ஏன் மேடம் உங்க வாழ்க்கையை அவங்க (ராதிகா) வாழ்ந்துட்டு இருக்காங்க எப்படி உங்களாள இப்படி இயல்பா பேச பழக முடியுது என்று கேட்கிறார்.
இதை கேட்ட பாக்யா இப்போ நான் வளர்ந்திருக்கேன் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார், ரொம்ப திருப்தியா இருக்கேன் என்று சொல்கிறார். அதன்பிறகு ராதிகாவிடம் செல்லும் பழனிச்சாமி, பாக்யா மேடம் மேல உங்களுக்கு கோபம் இல்லையே என்று கேட்க, சூழ்நிலை எங்களை நேர் எதிரா நிறுத்திடுச்சி, ஆன பாக்யாவை என்னால் வெறுக்க முடியாது என்று சொல்லும் ராதிகா. அவங்கள நீங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டியதானே சார் என்று கேட்க, பழனிச்சாமி அதிர்ச்சியாகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.