ஒரே தாலியை மொத்தமாக 10 பெண்களுக்கு... ஏடாகூடமா படத்தை ஆரம்பிக்கும் விஜய் டி.வி பிரபலம்!

பஜனை ஆரம்பம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின ஃபர்ஸ்ட் லுக் போஸடரில், நாயகன் 10 பெண்களுக்கு ஒரே பெரிய தாலியை கட்டுவது போன்று உள்ளது.

பஜனை ஆரம்பம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின ஃபர்ஸ்ட் லுக் போஸடரில், நாயகன் 10 பெண்களுக்கு ஒரே பெரிய தாலியை கட்டுவது போன்று உள்ளது.

author-image
WebDesk
New Update
Bhajanai Arambam

பஜனை ஆரம்பரம் ஃபர்ஸ்ட் லுக்

விஜய் டிவியின் நாஞ்சில் விஜயன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், போஸ்டரை வைத்தே படத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் முதல் பிரபலமாகி தற்போது சினிமாவில் நடித்து வருபவர் நாஞ்சில் விஜயன். தற்போது இயக்குநர் ஆனந்த் தக்‌ஷிணாமூர்த்தி இயக்கத்தில் அறிமுக ஹீரோ நடிக்கும் படத்தில் நாஞ்சில் விஜயன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ளார்

பஜனை ஆரம்பம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின ஃபர்ஸ்ட் லுக் போஸடரில், நாயன் 10 பெண்களுக்கு ஒரே பெரிய தாலியை கட்டுவது போன்று உள்ளது. இந்த போஸ்டரில் விஜய் டிவியின் நாஞ்சில் விஜயன், நாதஸ்வரம் வாசிப்பது போல் உள்ளார். தமிழில் வெளியாள ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, 2-ம் குத்து உள்ளிட்ட படங்களின் வரிசையில் இந்த படம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா சமந்தா என இருவரையும் ஒரே நேரத்தில் காதலிப்பதை விட மோசமாக 10 பெண்களுக்கு ஒரு இளைஞன் ஒரே தாலியை கட்டும் விதமாக போஸ்டர் வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு சமூக அக்கறையும் இல்லாமல் இப்படி ஒரு போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினருக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: