Tami Movie Beast Audio Launch Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு தற்போது நடித்துள்ள படம் பீஸ்ட். டாக்டர் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படம் விஜய் ரசிகர்க்ள மட்டுமல்லாது தமிழ் திரையுலத்தின் பெரிய எதிர்ப்பர்ப்பை ஏற்படுது்தியுள்ள நிலையில். பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்திது. ஏற்கனவே பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானது. யூடியூப் ட்ரெண்டிங்கில் முக்கிய இடம்பெற்றுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரையும் கவர்ந்தது. மேலும் சின்னத்திரை பிரபலங்கள் உட்பட பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டு வருகினறனர்.
இந்நிலையில், பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் மார்ச் 20 அல்லது 25 ஆம் தேதிகளில் நடக்கலாம் என்று சமூக வலைதளங்கள் மூலம் தகவல் வெளியானது. இதற்காக செட்வொர்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சமீப ஆண்டுகளாக ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு நீண்ட நாட்களாக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், இந்த விழா குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தத.
ஆனால் பீஸ்ட் படத்தின் தயாரிப் நிறுவனமான சன் பிக்சர்ஸ், ஆடியோ வெளியீட்டு விழாவில், மக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் ஆடியோ வெளியீட்டு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெரிவிக்கின்றன. ஆனால் மார்ச் 31 ஆம் தேதி துபாய் எக்ஸ்போ 2022 இன் கடைசி நாளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரெய்லரை வெளியிடவும் படக்குழு பரிசீலித்து வருகிறது.
இதனால் ஆடியோ வெளியீட்டிற்காக நீண்ட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் இல்லாமல் செய்யும் வகையில் பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பேசப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்படுகிறது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil