தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர்கள் படங்கள் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம். இதில் விஜய் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தி வசூலில் சாதனை படைத்துள்ளது.
ஆனால் சில படங்கள் சறுக்களை சந்தித்துள்ளன. இவ்வாறு தோல்வியடையும் படங்கள் அந்த படத்தை பற்றி பேசும்போதெல்லாம் அந்த தோல்வி நினைவுக்கு வரும் அளவுக்கு கடுமையாக விமாசனங்களையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களை மற்றவர்கள் கடுமையாக விமர்சிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் விஜய், பூஜத ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய் ரா ஏஜெண்டாக நடித்திருந்த இந்த படத்தில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு ஷாப்பிங் மாலில் மாட்டிக்கொள்ளும் வீரராகவன் (விஜய்) பனைய கைதிகளாக உள்ள மக்களை எப்படி காப்பாற்றினார் என்பதே கதை.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி வெளியான பீஸ்ட் படம் முதல் நாளே கடுமையான விமர்சனங்களை சந்தித்து. மேலும் வெளியான சில நாட்களிலேயே ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்ட பீஸ்ட் அங்கேயும் விமர்சனங்களை சந்தித்து. பான் இந்தியா படமாக வெளியான பீஸ்ட் அனைத்து மொழிகளிலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் சாதனை படைத்ததாக கூறப்பட்டது.
இதனிடையே அடுத்து வாரம் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி சிறப்பு திரைப்படமாக சன்.டி.வி.யில் பீஸ்ட் படத்தை திரையிட உள்ளனர். இதற்கான ப்ரமோ வெளியாகியுள்ள நிலையில், விஜய் பூஜா ஹெக்டே நடிப்பில் பீஸ்ட் சூப்பர் ஹிட் திரைப்படம் என்று சொன்னதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வெளியான முதல் நாளே கடுமையான விமர்சனங்களை சந்தித்த இந்த படம் சூப்பர் ஹிட்டா என்று பீஸ்ட் படத்தின் சன்.டி.வி ப்ரமோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருவது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil