விஜய் பட நடிகை ரகசிய திருமணம்: போட்டோஸ் வைரல்

Tamil Cinema Update : ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆன அவர், விஜயுடன் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து பிரபலமானார்.

Bigil Actress Secrest Marriage : மலையாளத்தில் வெளியான ஜோமுன்டே சொக்கராஜ்யம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆன அவர், விஜயுடன் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யானுடன் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஷ்னு விஷாலுடன் எஃப்ஐஆர், அக்போடர் 31 உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ரஜினி மற்றும் பெயரிடப்படான ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். பிகில் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தில் பிரபலமான இவர் தற்போது தனது நீண்டநாள் காதலர் ஜெமோன் ஜோசஃப் என்பரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இவர் திருமணம் செய்துகொண்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர். இத்திருமணம் தெடர்பாக புகைப்படங்கள் வலைதளத்தில் வலம் வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema bigil move actress secret marriage viral photos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com