பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து புகழ் பெற்ற நடிகை ரெபா மோனிகா ஜான் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
2016-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜோகபண்டே சுவிஷங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து 2018-ம் ஆண்டு தமிழில் வெளியான ஜருகண்டி படத்தின் மூலம் அறிமுகமானார்.
Advertisment
Advertisements
அதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் தமிழில் வெளியான பிகில் படத்தில் கால்பந்துவீராங்கனையாக நடித்து கவனம் ஈர்த்தார். அட்லி இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ரெபா மோனிகாவின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதன்பிறகு ஹரிஷ் கல்யாணுடன் தனுஷூ ராசி நேயர்களே, மலையாளத்தில் ஃபாரன்சிக், கன்னடத்தில் ரத்தன் பரபஞ்சா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அடுத்ததாக கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்தில் நடித்திருந்த ரெபா மோனிகா, கடைசியாக தமிழில் பூ என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மலையாளத்தில் ரஜ்னி, கன்னடத்தில் சகலகலா வல்லபா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ரெபா மோனிகா இணையத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இதில் அவர் வெளியிடும் புகைப்பங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரெபா மோனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“