New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Radhika-Sarathkumar-1.jpg)
Radhika sarath kumar with her mother
தனது அம்மாவின் மடியில் விரல் சூப்பிக்கொண்டு இருக்கும் ஒரு நடிகையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
Radhika sarath kumar with her mother
இணையதள வளர்ச்சி அதிகம் இல்லாத காலக்கட்டத்தில் பிரபலங்களின் புகைப்படங்களை நியூஸ் பேப்பர் மற்றும் வார பத்திரக்கைகளில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் தற்போது இணையதள வசதி அதிகரித்துள்ளதால் பிரபலங்களை தங்களை அழகாக செல்பி எடுத்து தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் அந்த புகைப்படங்கள் குறித்து ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீப காலமாக சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் இந்த நடிகையா, இந்த நடிகரா இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியமடைந்து வருகின்றனர். இதில் தற்போது தனது அம்மாவின் மடியில் விரல் சூப்பிக்கொண்டு இருக்கும் ஒரு நடிகையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்தால் இவரா அவர் என்ற ஆச்சரியம் பலருக்கும் வரும். நடிப்பில் தனி முத்திரை பதித்த ஒருவரின் வாரிசு என்ற அடையாளத்துடன் பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமான இந்த நடிகை பின்னாளில் தமிழ் சினிமாவில் தவிக்க முடியாத நாயகியாக வலம் வந்தார். தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் தன்னை நிரூபித்து வருகிறார். அந்த நடிகை வேறு யாருமில்லை. நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் மகன் ராதிகாதான்.
பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமான இவர், சினிமா மற்றும் சின்னத்திரை என் தனது ஆளுமையை செலுத்தினார். தற்போது திரைத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்ட ராதிகா கணவரின் சமத்துவ மக்கள் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.