அந்த 'சி' நடிகரின் வளர்ச்சி என்பது யாரும் கணித்திருக்க முடியாத ஒன்று. 10 வருடங்களுக்கு முன்பு, லைட்டாக நடுவாகு எடுத்து, சின்னத்திரையில் காமெடி செய்யத் தொடங்கியவர், இன்று தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக என்ட்ரி ஆகிவிட்டார் என்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்!. அசுர வளர்ச்சி என்றால் இது தான். இன்னும் சொல்லப்போனால், இன்றைய தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களின் ஓப்பனிங் வசூலை அவர் ரீச் செய்துவிட்டார் என்பதே உண்மை.
பல வருடங்களாக பல ஹீரோக்கள் உடலை வருத்தி, பலவிதமான கேரக்டரில் நடித்தும் மக்களிடம் கிடைக்காத அங்கீகாரம், மிஸ்டர் 'சி'-க்கு கிடைத்திருக்கிறது. ஆனால், இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியிருப்பதாக கிசுகிசுக்கிறது திரையுலகம். அதாவது, இந்த நடிகர் நடித்த திரைப்படம் ஒன்று பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிக சமீபத்தில் வெளியானது.
முதல் நாள் வசூல் நிலவரத்தை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டது. முதல் நாளே இரட்டை இலக்கத்தை படம் வசூல் செய்ய, அந்த விவரம் கடந்த 10- 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் 'நாங்களும் பெரிய ஹீரோக்கள் தான்' என சொல்லி வந்த மற்ற ஹீரோக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அடுத்த சூப்பர் ஸ்டார் எனும் ரேஞ்சிற்கு 'சி' நடிகர் தூக்கி வைக்கப்பட, ஒன்றும் சொல்லிக் கொள்ள முடியாமல், மற்ற ஹீரோக்கள் உள்ளுக்குள் புலம்பியிருக்கின்றனர்.
குறிப்பாக, தலயுடன் நடித்த வாரிசு நடிகர், ஓப்பனாகவே ட்விட்டரில் 'சி' நடிகருக்கு எதிராக காரசாரமாக கமெண்ட் போட்டுவிட்டு, பின்னர் எனது அட்மின் தவறாக போட்டுவிட்டார் என்று ஜகா வாங்கினார். இப்படி ஓப்பனாகவே 'சி' நடிகரை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு விவகாரம் சென்றுக் கொண்டிருந்தது.
ஆனால், அந்தப் படம் முதல் மூன்று நாட்கள் நல்ல வசூல் செய்தாலும், படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றும், ரசிகர்களை பெரிதும் ஏமாற்றிவிட்டதாகவுமே ஒரு தரப்பில் கூறப்பட்டது. குறிப்பாக, 'பத்தே படத்தில் உச்ச நட்சத்திரமாக நினைத்தால் இப்படித் தான் நடக்கும்; படிப்படியாக மேலே போங்க' என்ற ரீதியிலும் திரை விமர்சகர்கள் விமர்சனம் செய்ய, தமிழ் சினிமாவின் ஒரு இளம் ஹீரோ படையே, ட்ரீட் வைத்து இதனை கொண்டாடி இருக்கிறதாம்.
'சி' நடிகருக்கும் இந்த நடிகருக்கும் என்னயா தொடர்பு என்று நாமே ஆச்சர்யப்படும் ஹீரோக்கள் எல்லாம் பார்ட்டி வைத்து கும்மாளம் அடித்துள்ளார்களாம்.
ஆனால், இதை எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாத மிஸ்டர் 'சி' , இப்போது கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களையும் வரும் டிசம்பருக்குள் முடித்துவிட்டு, அடுத்த படத்தை உடனே துவங்க திட்டமிட்டுள்ளாராம். சங்கத் தலைவரை இயக்கிய வெற்றிகரமான இயக்குனருக்கு தான் அடுத்தப் பட வாய்ப்பை கொடுத்துள்ளாராம்.