எம்.எஸ்.வி இசையில் இன்றும் கொண்டாடக்கூடிய பாடல்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் ஒரு பாடல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், சினிமா பிரபலங்களுக்கு சோகத்தையே கொடுத்து வருகிறது என்பது பலரும் அறியாத ஒரு உண்மை. இதற்கு காரணம் என்ன தெரியுமா?
Advertisment
தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்ற போற்றப்படுவபவர் கே.பாலச்சந்தர். தனது இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், 80-களின் தொடக்கத்தில் வேலை இல்லாத இளைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுத்த படம் தான் வறுமையின் நிறம் சிவப்பு. கமல்ஹாசன், ஸ்ரீதேவி இணைந்து நடித்த இந்த படத்தில் எஸ்.வி.சேகர், திலீப், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்திற்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். படத்தில், இடமபெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. குறிப்பாக, இதில் வரும் சிற்பி இருக்குது முத்தும் இருக்குது என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் இன்றும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜானகி பாடிய இந்த பாடலில், ஜானகி சந்தம் சொல்ல, அதற்கு எஸ்.பி.பி வரிகளை சொல்வது போல் இருக்கும்.
இந்த பாடல் காட்சி காஷ்மீர் அருகே உள்ள குலுமனாலியில் படமாக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த குலுமனாலியில், அடிக்கடி பனிச்சரிவு, மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம். அதேபோல் மேலே செல்ல செல்ல ஆக்ஸிஜன் லெவல் குறையும். இந்த தடைகளை கடந்து அங்கே சென்ற படக்குழுவினர், பாடல் காட்சியை படமாக்கிவிட்டு மீண்டும் திரும்பியுள்ளனர்.
Advertisment
Advertisement
அப்போது 2 பேருந்துகளில் ஒன்று முன்னே செல்ல, பாலச்சந்தர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் சென்ற பேருந்து பின்னால் சென்றுள்ளனர். அப்போது முன்னே சென்ற பேருந்து திடீரேன நிலச்சரிவில் சிக்கி தடம் புரண்டுள்ளது. இதனால், அதில் இருந்த பலர் மரணமடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இயக்குனர் கே.பாலச்சந்தர், இந்த படமே வேண்டாம் என்று கிடப்பில் போட்டுள்ளார். அதன்பிறகு சில மாதங்கள் கழித்து அவரை தேற்றி இந்த படத்தை வெளியிட பலர் உதவியுள்ளனர்.
இப்போதும் இந்த பாடலை கேட்க சுகமாக இருந்தமாலும், இந்த பாடல் படமாக்கப்பட்டபோது பலர் மரணமடைந்துள்ளனர் என்ற தகவல் திரைத்துறையினரை உலுக்கியுள்ளனது, இந்த தகவலை ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது விளரி யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“