/indian-express-tamil/media/media_files/2025/08/09/captain-prapakaran-2025-08-09-12-14-30.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த கேப்டன் விஜயகாந்த நடிப்பில் வெளியான 100-வது படமான கேப்டன் பிரபாகரன், அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
சினிமா பின்புலம இல்லாமல் சினிமாவில் சாதித்த முன்னணி நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் கேப்டன் விஜயகாந்த். பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இவர், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு இயக்குனராகும் வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த், அரசியலிலும் குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தவர். சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் 100-வது படம் வெற்றி பெறாத நிலையில், விஜயகாந்துக்கு 100-வது படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், கடந்த 1991-ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் தான் விஜயகாந்தின் 100-வது திரைப்படம். சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபனி, காந்திமதி, நம்பியார், ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தில் விஜயகாந்தின் கேரக்டர் அவரது நடிப்பு, பலரின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது படம் வெளியாகி 34 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 25 விஜயகாந்த் பிறந்த நாளை முன்னி்ட்டு கேப்டன் பிரபாகரன் திரைப்படம் (ஆகஸ்ட் 22) இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் புதுப்படம் ரிலீஸ் ஆனது போன்று ரசித்து பார்க்கின்றனர். படம் பார்த்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன், இருவரும் கண்ணீர் விட்டு தியேட்டரில் கதறி அழுதுள்ளனர். படம் குறித்து ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
வெற்றிநடை போடும் திரையரங்கம் கொண்டாடும் கேப்டன் பிரபாகரன்...#vijayakanth#Ramakrishnan | #mansooralikhan
— cmvijayakanthcaptain (@captainsivakuma) August 22, 2025
கேப்டன் பிரபாகரன் | ரம்யா கிருஷ்ணன் | | திரைப்படம் | ரீ ரிலீஸ் | ஆகஸ்ட் 22 | #cmvijayakanthcaptain | #captainprabakaran | #vijayakanthmovie | #captainprabhakaran | pic.twitter.com/yhZhDeHrLP
அண்ணியார் #Watch | 'கேப்டன் பிரபாகரன்' ரீ-ரிலீஸ்: கண்கலங்க பார்த்த விஜயகாந்த் குடும்பத்தினர்#SunNews | #DMDK | #CaptainPrabhakaran | #Vijayakanth | #Premalathapic.twitter.com/C8pzMJoG9Z
— Vetri Nayagan (@Murugan11311599) August 22, 2025
1991ஆம் ஆண்டு வெளியான கேப்டனின் 100வது திரைப்படம் 'கேப்டன் பிரபாகரன்' 34 வருடங்களுக்கு பிறகு இன்று ரீ ரிலீஸ்#Vijayakanth#Captainprabhakaran#Re_release#Tamilcinema#captain Vijayakant #captainvijayakanthpic.twitter.com/SvT2aefMOn
— suppiah seenivasan❤💛🖤🕉✝☪💪🙏 (@SeenivasanDevi) August 22, 2025
#CaptainPrabhakaran#CaptainPrabhakaranReRelease#vijaykhanth@dmdkpic.twitter.com/Cli1BVEdV5
— Thalapathy Bloods👑❤️🔥 (@PediaVillain) August 22, 2025
#CaptainPrabhakaran 290 Days daily 4 Shows in 1991 from the release day at @kasi_theatre
— Cine Murugan (@CineMuruganoffl) August 22, 2025
Huge achievement in single screen record in tamil movie release history 🔥🔥#Vijayakanth#Sarathkumar@meramyakrishnanhttps://t.co/8tWnxxJxhj
Semaaa Response for the Legend One & Only Our Captain.. 🔥🔥💥💥#CaptainPrabhakaran Re Release getting super response 👏👏👏🙌🙌#CaptainVijayakanth@KamalaCinemas u done a great job 👏👏👌pic.twitter.com/e4BXMrRfZN
— Sugan Krish (@Im_Sugan07) August 22, 2025
Finally #CaptainPrabhakaran seeing 1st time in my life ❤️; DIALOGUES 🔥 Making ,Casting ,Music ,Visuals & Finally our #Captain dialogue delivery 🔥 🔥 🔥 Missing you kadavule 💔 💔 😢 😭 ; Thank You #rkselvamani sir 🙏 @iVijaykanth 🙏😭💔 pic.twitter.com/H9WzpqSs1opic.twitter.com/0vewyQwATs
— M Cine Reviews (MCR) 📽️ (@smsmani9011) August 22, 2025
மேலும், விஜயகாந்த ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் மீண்டும் விஜயகாந்தை திரையரங்கில் பார்த்ததை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.