/indian-express-tamil/media/media_files/2025/08/04/goundamani-vijayakanth-2025-08-04-15-13-25.jpg)
விஜயகாந்தின் ஆரம்ப கால படங்கள் தொடங்கி பக்யராஜ் இயக்கத்தில் வெளியான சொக்கத்தங்கம் வரை பல படங்களில் கவுண்டமணி நடித்திருந்தாலும், பெரும்பாலான படங்களில் அவருக்கும் விஜயகாந்துக்கும் இடையே பெரிய அளவில் காட்சிகள் இருந்திருக்காது என்பதற்கு தயாரிப்பாளர் சிவா ஒரு சம்பவத்தை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த கேப்டன் விஜயகாந்த், அரசியலில் குறுகிய காலத்தில், எதிர்கட்சி தலைவராக அமர்ந்து வெற்றிக்கொடியை நாட்டியவர். சினிமாவில் இவரை எம்.ஜி.ஆர் அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவருடன் இருந்து பணியாற்றிவர் தான் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த் – ராவுத்தர் இடையேயனா நட்பு குறித்து சினிமா வட்டாரங்களில் இருந்து வெளியாகும் பல தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
விஜயகாந்தின் வாழ்க்கையில் அவரது மனைவி உட்பட அனைத்து முடிவுகளையும் எடுத்தவர் இப்ராஹிம் ராவுத்தர் தான். விஜயகாந்தை எப்படி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லாம் என்பது குறித்து 24 மணி நேரமும் யோசிக்கும் ஒரு கேரக்டர். அதேபோல் அவர் தூக்கத்தில் எழுப்பி எதை சொன்னாலும் அதை அப்படியே செய்யும் கேரக்டர் தான் விஜயகாந்த். ஒரு விஷயத்தில் தனித்து முடிவு செய்துவிட்டு, பிறகு ராவுத்தர் வேண்டாம் என்று சொன்னால் அந்த வேலையை விஜயகாந்த் செய்யவே மாட்டார்.
விஜயகாந்த்துக்கு பொண்ணு பார்த்ததும் ராவுத்தர் தான். அவர் முதலில் பார்த்துவிட்டு அதன்பிறகு விஜயகாந்திடம் சொல்ல, அடுத்துதான் இவர் பெண் பார்க்க சென்றுள்ளார். இந்த அளவிற்கு நெருக்கமான இருந்த விஜயகாந்த் ராவுத்தர் இடையேயான நட்பு, பெரிய உள்ளார்ந்த நட்புக்கு உதாரணம். விஜயகாந்துக்கான கதை கேட்டாலும் பெரிய அளவில் அதில் மூக்கை நுழைக்காமல், ஒரு சில காட்சிகளை மட்டும் இப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வார்.
அப்படித்தான் ஆர்.வி.உதயகுமார் கதை சொல்ல வந்தபோது கதை நல்லா இருக்கு. ஆனா எக்காரணத்தை கொண்டும், கவுண்டமணி விஜயகாந்திடம் பேசிவிட கூடாது. அப்போது கவுண்மணி கவுண்டரில் நல்ல பீக்ல வந்துட்டு இருக்காரு, அந்த படத்தில் விஜயகாந்தை கலாய்த்து ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அவரது கேரக்டர் நின்றிருக்காது. இப்படி விஜயகாந்த் குறித்து எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவர் தான் இப்ராஹிம் ராவுத்தர் என்று அம்மா கிரியேஷன்ஸ் சிவா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.