/indian-express-tamil/media/media_files/2025/01/26/kj1QTqLYN8KpPRf4omM9.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், குறுகிய காலத்தில் அரசியலில் முத்திரை பதித்தவருமான கேப்டன் விஜயகாந்த், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரை அடிக்க துரத்தியுள்ளார். இது குறித்து அந்த இயக்குனரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், என திரைத்துறையில் பன்முக திறமையுடன் வலம் வந்த விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கி குறுகிய காலத்தில் அரசியலிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார். ரசிகர்கள் மத்தியில் கேப்டன் என்று அழைக்கப்படும் இவர், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான சாப்பாடு வழங்க வேண்டும் என்று கடைசிவரை கடைபடித்தவர் என்ற தகவல் தற்போதுவரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதேபோல், தன்னால் இயன்றவரை அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, விஜயகாந்த் திரைப்படக்கல்லூரி மாணவர்கள் இன்று, சினிமா துறையில் அதிகம் வருகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் தான். ஊமை விழிகள் என்ற படத்தை திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்காக நடித்து கொடுத்து அவர்களுக்கு ஒரு வழியகாட்டியாக இருந்த விஜயகாந்த், அதே திரைப்படக்கல்லுரியில் இருந்து வந்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரை படப்பிடிப்பு தளத்தில் அடிக்க ஓட ஓட விரட்டியுள்ளார்.
இது குறித்து ஆர்.வி.உதயகுமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சின்னக்கவுண்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில், எனது நண்பர் ஒருவர் என்னை பார்க்க வந்தார். அவர் என்னை விட பெரியவர், எனக்கு முன்பே எஸ்.எஸ்.எல்.சி படித்து தேர்ச்சி பெறாமல், அதன்பிறகு என்னுடன் படித்து தேர்ச்சி பெற்றார். அவருக்கும் எனக்கும் 5 வருடம் வித்தியாசம் இருக்கும். அவர் என்னை பார்க்க வந்தபோது, விஜயகாந்த் அவருடன் பேசி ஃப்ரண்ட் ஆகிவிட்டார். அப்போது அவரது வயதை கேட்டு அதிர்ச்சியாக விஜயகாந்த் எனக்கும் அதே வயது என்று நினைத்துக்கொண்டார்.
அதன்பிறகு தினமும், உதயகுமார் அண்ணே ஷாட் ரெடியா அண்ணே நான் ரெடியா இருக்கேன் அண்ணே என்று சொல்லி கிண்டல் செய்துகொண்டே இருந்தார். இவர் ஏன் இப்படி செய்கிறார் என்று எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. ஆனாலும் நான் அதை பற்றி ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் போக போக அவர் கிண்டல் அதிகமாகிக்கொண்டே இருந்தது. கடைசி நாள் படப்பிடிப்பில், ஒரு சில ஷாட்கள் எடுக்கும்போது, தம்பி விஜி ஷாட் ரெடி வாங்க என்று நான் சொல்லிவிட்டேன்.
இதை கேட்ட அவர், சுற்றி திரும்பி பார்க்க, உங்களைத்தான் தம்பி விஜி வந்து நடிங்க ஷாட் ரெடி என்று சொல்ல, கடுப்பான விஜயாகந்த், என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்க துரத்த, நான் அவருக்கு பயந்து ஓட, அவர் என்னை விட்ட, பெரிய கலாட்டாவே நடந்தது என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.