இஷ்டத்துக்கு இங்கிலீஷல பேசுறா... அப்படி பேச கூடாதுனு சொல்லு: ராதாரவியிடம் புலம்பிய கேப்டன்!

ஏதோ ஒரு பெண்ணு இஷ்டத்துக்கு இங்கிலீஷில பேசுறா. யாருக்குடா இங்கிலீஷ் தெரியும்? இங்கிலீஷ்ல பேச வேண்டானு சொல்லு என்று சொன்னார்.

ஏதோ ஒரு பெண்ணு இஷ்டத்துக்கு இங்கிலீஷில பேசுறா. யாருக்குடா இங்கிலீஷ் தெரியும்? இங்கிலீஷ்ல பேச வேண்டானு சொல்லு என்று சொன்னார்.

author-image
WebDesk
New Update
Vijayakanth Mkj

தனது வாழ்நாளில், வேற்றுமொழி படங்களில் நடிக்காமல் தமிழ் படத்திற்கே முக்கியத்துவம் கொடுத்த கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் தொலைபேசியில் இங்கிலீஷில் பேசிய பெண் குறித்து ராதாரவியிடம் பேசியுள்ளது குறித்து டப்பிங் நடிகர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கேப்டன் என்று அழைக்கப்பட்ட இவர், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டவர். அதன்படி தொடர்ந்து அதை தனது படத்தின் படப்பிடிப்பில் கடைபிடித்தவர் விஜயகாந்த். மேலும் பல புதுமுக இயக்குனர்களுக்கு  வாய்ப்பு கொடுத்தவர்.

அதேபோல் தளபதி விஜய், சூர்யா ஆகியோர் தங்கள் சினிமா வாழ்கையில் முன்னிலை பெற அவர்களது படங்களில், துணை கேரக்டரில் நடித்திருந்த விஜயகாந்த், தனது வாழ்நாளில் தமிழ் படத்தை தவிர மற்ற எந்த மொழி படங்களிலும் நடிக்காதவர். அதேபோல் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வந்த விஜயகாந்த், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர், சினிமாவில் கூட தமிழ் மொழிக்கு ஆபத்து என்றால் அதற்காக வலிமையாக குரல் கொடுக்கும் கேரக்டரில் தான் நடித்திருப்பார்.

இந்த அளவுக்கு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜயகாந்த், தன்னிடம் ஆங்கிலத்தில் பேசிய ஒரு பெண் குறித்து நடிகர் ராதாரவியிடம் புலம்பியுள்ளார். தமிழ் சினிமாவில், சாமி படத்தின் மூலம் அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். இந்த படததில் இவருக்கு தமிழில் குரல கொடுத்து பிரபலமானவர் தான் டப்பிங் நடிகர் ராஜேந்திரன். தமிழில் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ள இவர், விஜயகாந்துடன் நெருக்கமான நட்பில் இருந்துள்ளார்.

Advertisment
Advertisements

யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய டப்பிங் நடிகர் ராஜேந்திரன் விஜயகாந்த் குறித்து ஒரு தகவலை பகிர்நதுகொண்டார். அதில், ஒருமுறை நானும் விஜயகாந்த் சாரும் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சேம்பர் அலுவலகத்தில் இருந்து போன் செய்தார்கள். "போனை நான் எடுத்தபோது, ஒரு பெண், "சேம்பர் பிரசிடென்ட் ஐயா பேச வேண்டும்" என்று சொன்னார். நானும் விஜயகாந்திடம் சேம்பர் அலுவலகத்திலிருந்து பேசுகிறார்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர், "பேசட்டும்" என்று சொல்லிவிட்டு போனை வாங்கினார்.

போனில் அவர் பேசும்போது, "ஹலோ... யார்மா பேசறது?" என்று சாதாரணமாகக் கேட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர் மிகவும் ஸ்டைலாக, "ஹலோ!" அந்த பக்கம் பேசிய பெண், இவர் ஹலோ சொன்ன விதமே எவ்வளவு ஸ்டைலாக இருக்கிறது! இவர்பெரிய ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்திருப்பார் போலிருக்கிறது என்று நினைத்து இங்கிலீஷில் பேசியுள்ளது. அப்போது என்ன பார்த்த விஜயகாந்த், சிறிது நேரத்தில் ராங் நம்பர் என்று போனை வைத்துவிட்டார்.

அவரை பார்த்தவுடன், நான் எழுந்து வெளியே வர முயன்றபோது, "ஏய்! எங்கே போற?" என்று கேட்டார். நான், "ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தபோது, ராதாராவி சார் வந்தார். அவர், "என்ன நடந்தது?" என்று கேட்டார். நான், "உள்ளே போய் பாருங்கள், அவர் செய்கிற கூத்தை" என்று சொன்னேன். அவர் உள்ளே உள்ளே வந்து என்னடா செய்யற என்று கேட்க,  நான் போனை எடுத்து ஹலோ சொன்னதும், அங்கிருந்து ஏதோ ஒரு பெண்ணு இஷ்டத்துக்கு இங்கிலீஷில பேசுறா. யாருக்குடா இங்கிலீஷ் தெரியும்? இங்கிலீஷ்ல பேச வேண்டானு சொல்லு என்று சொன்னார். அப்படி ஒரு வெள்ளந்தியான, ரங்கமான மனிதர் என்று கூறியுள்ளார். 

Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: