Advertisment

விஜய் சேதுபதி முதல் கருணாஸ் வரை : விஜயகாந்த் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி

தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகினறனர்.

author-image
WebDesk
New Update
Vijayakanth Death

விஜயகாந்த் மரணம்

தமிழ் திரையுலகில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். அவரது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை மாலை 4 மணியளவில், கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என்று கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

இதனிடையே தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகினறனர். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், நடிகர்கோவிலில் இருந்து புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் நடிகைகள் பலரும் சமூகவலைதளங்களில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் வெளிநாட்டில் இருக்கும் நடிகர் விஷால், இந்த நேரத்தில் நான் உங்களுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் இல்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்று அழுதுகொண்டே வீடியோ வெளியிட்டு விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் தேமுதிக அலுவலகத்தில் குவிந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனிடையே திரையுலக பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்திரன், விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். சிம்பு வெளிநாட்டில் இருப்பதால், உங்களால் முடியவில்லை என்றாலும் எனக்காக கேப்டனை கடைசியாக பார்த்துவிட்டு வாருங்கள் என்று சிம்பு கூறியதாக டி.ஆர் தெரிவித்திருந்தார்.

அதேபோல் நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் கருணாஸ் விஷயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் எவ்வித தடையும் இல்லாமல் கேப்டன் விஜயகாந்த் உடலை கடைசியாக பார்த்துவிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடலை ராஜாஜி பவனில் வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாக கூறியுள்ளார்.

தனது குடும்பத்துடன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் பிரபு, எனது அப்பா சிவாஜி இறந்தபோது தனி ஒரு மனிதனாக நின்று, அவரை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தவர் விஜயகாந்த். ஏனென்றால் அவர் சிவாஜிக்கு இன்னொரு மகன். எனது அண்ணன் மறைக்கு நான் குடும்பத்துடன் வந்து மரியாதை செலுத்தியிருக்கிறேன். கேப்டன் எனது இனிய நண்பர் ஆத்மா சாத்தியடையட்டும் என்று கூறிவிட்டு காரில் ஏறும்போது கேப்டன் என்று உறக்க சொல்லிவிட்டு அழுதுகொண்டே புறப்பட்டார்.

அவரை தொடர்ந்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கவிஞர் வைரமுத்து, நடிகர் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதேபோல் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பேரரசு, நான் அவரை வைத்து தர்மபுரி என்ற படத்தை இயக்கினேன். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒருநாள் கூட அவர் தான் ஒரு பெரிய நடிகன் என்பதை எங்கும் காட்டிக்கொள்ளவில்லை. இயக்குனர் முதல் லைட்மேன் வரை அனைவருடனும் சமமாக பழகுபவர். மனிதரை மனிதராக மதிக்கும் மிக சிறந்த மனிதர் விஜயகாந்த் என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன் படத்தின் இயக்குனர் செந்தில்நாதன், நடிகர் தியாகு, மன்சூர் அலிகான், விஜய் சேதுபதி, நடிகர் ரமேஷ் கண்ணா, கோவை சரளா, உள்ளிட்ட பலரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment