Advertisment

சுந்தர்.சி முதல் பாக்யராஜ் வரை : துபாய் ஹோட்டல் திறப்பு விழாவில் தமிழ் நட்சத்திரங்கள் : வைரல் போட்டோ!

ஹோட்டலின் திறப்பு விழா வரும் மே 26-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ravaanakottam Team
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இராவணக்கோட்டம் படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தூபாயில் பிரம்மாண்ட ஹோட்டல் திறக்க உள்ள நிலையில், இந்த திறப்பு விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

Advertisment

இயக்குனர் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் இராவணக் கோட்டம். சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருந்தார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியானது.

கருவேலமர அரசியலை மையமாக வைத்து, சாதிப்பிரச்சனைகளை பற்றி பேசும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் கலவையா விமர்சனங்களை பெற்றிருந்தாலும், சாந்தனுவின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக மாறிய கண்ணன் ரவி தற்போது தூபாயில் பராக் (BARAAK) என்ற பிரம்மாண் ஹோட்டலை திறக்க உள்ளார்.

இந்த ஹோட்டலின் திறப்பு விழா வரும் மே 26-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும், ராதிகா சரத்குமார், சுந்தர்.சி, விஷால் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, கங்கை அமரன், நடிகை கீர்த்தி சுரேஷ், சாந்தனு அவரது மனைவி, ஜெய், சதீஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

Ravaanakottam Team

மேலும் எம்.பி.திருமாவளவன், நடிகர் பிரகாஷ் ராஜ், பாக்யராஜ், பூர்ணிமா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது. சினிமா நட்சத்திரங்கள், மற்றும் அரசியல் பிரபலங்கள் பங்கேற்கும் இந்த ஹோட்டல் திறப்பு விழா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment