சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத் புகைப்படங்கள்
1/6
கங்கனா ரனாவத் சினிமா அறிமுகம்
2006-ம் ஆண்டு இந்தியில் வெளியான கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். தொடர்ந்து வாவ் லம்ஹா, .லைஃப் இன் எ மெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2/6
தமிழில் அறிமுகம்
2008-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக கங்கனா முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார்.
3/6
தமிழில் வாய்ப்பு இல்லை
அதன்பிறகு தமிழில் பல படங்களில் கமிட் ஆகி முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்கனாவுக்கு தமிழில் சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
Advertisment
4/6
மீண்டும் இந்தி படம் - தெலுங்கு அறிமுகம்
இதனையடுத்து மீண்டும் இந்தி சினிமாவுக்கு சென்ற கங்கனா, இ.கே நிரஞ்சன் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் இதன் பிறகு அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்பு அமையவில்லை.
5/6
சந்திரமுகி 2
நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைவி என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் தமிழில் ரீ-என்டரி கொடுத்த கங்கனா தற்போது சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
6/6
இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ள சந்திரமுகி 2 படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கங்கனா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில வித்தியாசமாக புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது.