ஜோதிகா அளவுக்கு நடிப்புத்திறனை வெளிப்படுத்துவது சாத்தியமற்றது என்று சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமவில் வரலாற்று வெற்றியை பெற்ற படம் சந்திரமுகி. 90 களில் மலையாளத்தில் வெளியான மனிச்சித்திரதாஷ் என்ற படத்தின் ரீமேக்கான சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வினித், வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் சந்திரமுகி கங்கா என இரு கேரக்டருக்கும் நடிப்பில் வித்தியாசம் காட்டிய ஜோதிகா சிறந்த நடிகைக்கான தமிழக அசின் விருதை பெற்றிருந்தார். தமிழ் சினிமா வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்த சந்திரமுகி படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இயக்கி வரும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஜோதிகா அளித்த பேட்டி தொடர்பான வீடியோவில் தனக்கு பிடித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை கங்கனா ரனாவத், சந்திரமுகி 2 படத்திற்காக படத்தின் முதல் பாகத்தை மீண்டும் பார்த்து வருவதாகவும், ஜோதிகாவின் புத்திசாலித்தனமான நடிப்புடன் தன்னை பொருந்துவது சாத்தியமில்லை’ என்றும் கூறினார்.
மேலும் சந்திரமுகி படம் தனக்கு ஊக்கமளிக்கிறது உண்மையில் சந்திரமுகியில் ஜோதிகாவின் சிறந்த நடிப்பை நான் ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறேன், ஏனென்றால் நாங்கள் சந்திரமுகி 2 படத்திற்கான க்ளைமாக்ஸ் படப்பிடிப்பை நடத்துகிறோம், படத்தின் முதல்பாகம் எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக உள்ளது. ஜோதிகாவின் சிறந்த புத்திசாலித்தனமான நடிப்புடன் பொருந்துவது நடைமுறையில் சாத்தியமற்றது என்று கூறியுள்ளார்.
That’s encouraging, as a matter of fact I am watching Jyothika ji’s iconic performance in Chandramukhi almost every day because we are shooting the climax it’s nerve wracking, how astonishing she is in the first part!! it is practically impossible to match up to her brilliance 🙏 https://t.co/JENhDhbhFC
— Kangana Ranaut (@KanganaTeam) February 12, 2023
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசையில், கலா மாஸ்டா நடனத்தில் கடந்த மாதம், சந்திரமுகி 2 க்கான க்ளைமாக்ஸ் பாடலை படப்பிடிப்பு நடந்ததாக கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.. இதற்கு முன், கங்கனா 2008-ம் ஆண்டு தமிழில் வெளியான ஜெயம்ரவியின் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு இந்தி மற்றும் தமிழில் வெளியான தலைவி (2021) திரைப்படத்தில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜே ஜெயலலிதாவாக நடித்திருநதார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“