பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த படம் ஆன்லைனில் கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. 18 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ள நிலையில், லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் பாசிட்டீவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தற்போது இந்த படம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தியேட்டரில் வெளியாகும் படங்கள் முதல் நாளே ஆன்லைனில் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. இதை தடுக்க சினிமா துறையும் அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டாலும் இந்த நிலை தற்போதுவரை தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது இதுபோன்று ஆன்லைனில் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வகையில் சந்திரமுகி முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து 2-வது பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், தற்போது படம் முழுவதும் எச்.டி குவாலிட்டியில் டோரண்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“