/indian-express-tamil/media/media_files/2025/08/25/chandramukhi-actress-2025-08-25-16-43-20.jpg)
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவில் மெகாஹிட் திரைப்படங்களில் ஒன்றாக மாறிய சந்திரமுகி திரைப்படத்தில், நடித்திருந்த பல நட்சத்திரங்கள் இன்று, அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளனர். அந்த வகையில் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மி மற்றும் நாசர் கேரக்டரின் இளைய மகளாக நடித்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, வினித், மாளவிகா, நாசர், சோனு சூத், விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடிப்பில் வெளியான ஆப்தமித்ரா என்ற படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படம் 90-களில் மலையாள ரசிகர்களை மிரட்டிய மணிச்சித்திரதாழ் படத்தின் கதை.
இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தாலும், ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து கவனம் ஈர்த்த சிலர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சுஜிபாலா. நாசர் நடித்த கந்தசாமி கேரக்டரின் இளையமகளாக நடித்திருந்த இவர், நாசர் ரஜினிகாந்திடம் பேசிக்கொண்டு இருக்கும்போது டாக்டர் நேற்று நைட், உங்க கண்ணாடியை என் ரூமிலே விட்டு வந்துட்டீங்க என்று சொல்வதும் அதற்கு நாசர் கொடுக்கும் ரியாக்ஷனும் தியேட்டரில் அதகளம் செய்தது.
படத்தில் வடிவேலு காமெடி பெரிதாக வொர்க் ஆகி இருந்தாலும் இடையில், வரும் இதுபோன்ற காமெடிகள் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. அதேபோல், ரஜினிகாந்த் ஊருக்கு செல்லும்போது நாசரின் முதல் மகள் மாளவிகாவின் கல்யாண விஷயத்தை பேசிவிட்டு, பத்திரக்கை வைங்க, வேணுணா உங்க ரெண்டாவது பொண்ண என்று சொல்ல, அப்போது நாசர் கண்டிப்பா நான் பத்திரக்கை வைக்கிறேன் நீங்க போய்ட்டு வாங்க அய்யா என்று சொல்லும் காட்சிகள் இன்றும் பல மீம்ஸ் டெம்லேட்களாக கவனம் ஈர்க்கின்றன.
இந்த படத்தில் நாசரின் இளைய மகளாக நடித்த நடிகை சுஜி பாலா இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? கடந்த 2003-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான தென்னவன் படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடித்திருந்த இவர். அடுத்து கலாட்ட கணபதி, கேம்பஸ், கிச்சா வயசு 16, தனுஷின் ட்ரீம்ஸ் என 5 படங்களில் நடித்திருந்தார். 6-வது படமாக அவர் நடித்தது தான் சந்திரமுகி. இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ரஞ்சித்தின் டான் சேரா என்ற படத்தில் நடித்திருந்தார். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு திருநாள் மற்றும் அஞ்சிக்கு ஒன்னு என்ற பத்தில் நடித்திருந்தார்.
முத்துக்கு முத்தாக படத்தில் ராசாத்தி கேரக்டரில் நடித்திருந்த இவர், மாமனார் மாமியாரை கொடுமைப்படுத்தும் வில்லியாக நடித்திருப்பார். அதேபோல், கோரிப்பாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள சுஜிபாலா, நடிப்பில் கடைசியாக வெளியான படம் தத கஜ ராஜா. கடந்த 2012-ம் ஆண்டு முடிந்த இந்த திரைப்படம் 2025-ம் ஆண்டு வெளியானது. தமிழில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், கடைசியாக 2012-ம் ஆண்டு ஆண்பாவம் என்ற சீரியலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பொம்மி என்ற குழந்தை நடச்த்திரமாக நடித்த பிரஹர்ஷிதா, செல்வி, வேலன் ராஜ ராஜேஷ்வரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக வேலன் சீரியலில் இவர் கடவுள் முருகன் கேரக்டரில் நடித்து அசத்தினார். சந்திரமுகி படத்தில் இவர்கள் இருவரும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.