12 வயதில் டான்ஸ் மாஸ்டர்; எம்.ஜி.ஆரை திருமணம் செய்ய நினைத்த பெண் ரஜினி: அந்த கேரக்டர் நடிகை இவர் தான்!

எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரையும் மாமா என்று தான் கூப்பிடுவேன்.ஜெயப்பிரதா, ஜெயசுதா, ஜெயமாலினி, வாணிஸ்ரீ, குமாரி சச்சு உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நடனம் சொல்லி கொடுத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரையும் மாமா என்று தான் கூப்பிடுவேன்.ஜெயப்பிரதா, ஜெயசுதா, ஜெயமாலினி, வாணிஸ்ரீ, குமாரி சச்சு உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நடனம் சொல்லி கொடுத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rajni Nivthe

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஒருசில படங்களில் நடித்து, எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் ரஜ்னி நிவேதா. எம்.ஜி.ஆருடன் நவரத்தினம், சிவாஜியுடன், ராஜரிஷி, தவப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், பயணங்கள் முடிவதில்லை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயின்களின் தோழியாக நடித்துள்ளார். இவர் எம்.ஜி.ஆரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தனது சிறுவயதில் பலரிடம் கூறியுள்ளதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Advertisment

நான் 5 மாத குழந்தையாக இருந்தபோது, எங்க அம்மா ஒரு படத்தின் ஷூட்டிங் பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ஒரு ஆண் குழந்தை தேவைப்பட்டது. ஆனால் படக்குழு குழந்தை ஏற்பாடு செய்வதற்குள், அந்த படத்தின் இயக்குனர் என்னை தேர்வு செய்துள்ளார். அப்போது என் சிரிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்பதால் என்னை தேர்வு செய்துள்ளனர். ஆனால் எங்க அம்மா என்னை படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை.

அப்போது அந்த படத்தின் இயக்குனர், இந்த ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் தான் தேவை. அதன்பிறகு குழந்தை வளர்ந்துவிடும். இதற்கு மட்டும் கொடுங்கள் என்று சொல்ல, அதன்பிறகு அந்த படத்தில் என்னை நடிக்க வைத்துள்ளனர். அதன்பிறகு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளேன். இடையில் டான்ஸ் கற்றுக்கொண்டு பாடல் காட்சிகளுக்கு நடனமாடுவது என பல படங்களில் நடித்துளேன். தவபுதல்வன் படத்தில் வரும் கிங்கினி கிங்கினி பாடலில் என் நடனத்தை பார்த்து நீ நடனத்தை கம்போஸ் செய்யலாமே என்று நடன இயக்குனர் சொன்னார்.

12 வயதில் டான்ஸ் கம்போஸ் செய்தேன். அப்போது ஜெயப்பிரதா, ஜெயசுதா, ஜெயமாலினி, வாணிஸ்ரீ, குமாரி சச்சு உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நடனம் சொல்லி கொடுத்திருக்கிறேன். சிறுவயதில் இருந்தே எம்.ஜி.ஆர் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ யாரை திருமணம் செய்துகொள்வாய் என்று கேட்டால் நான் எம்.ஜி.ராமச்சந்திரனை தான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்வேன். நீ கல்யாணம் பண்ணிக்கும்போது அவர் கிழவன் ஆகிவிடுவார் என்று சொல்வார்கள். ஆனாலும் நான் அவரைத்தான் கட்டிக்குவேன் என்று சொல்வேன்.

Advertisment
Advertisements

ஒருமுறை அவரை நேரில் பார்த்தபோது, அவர் காலில் விழுந்து மாமா மாமா உங்களுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். என் ஆர்வத்தை பார்த்மது, அவர், அடுத்து தான் நடிக்க உள்ள படத்தில் அவரின் தங்கை கேரக்டர் கொடுத்தார். அந்த படத்திற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. காஸ்டியூம்ஸ் எல்லாம் தைச்சாச்சு, ஷூட்டிங் போற சமயத்தில் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அதன்பிறகுதான் நவரத்தினம் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் என்று ரஜ்னி நிவேதா கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: