கமல்ஹாசனுடன் கை கோர்த்த பிரபல நடிகை : முதல் ட்விட்டர் பதிவு வைரல்

நடிப்பு மட்டுமல்லாமல் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி வரும் வினோதினி, நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்த வெளிப்படையாக பல கருத்துக்களை கூறி வருகிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி வரும் வினோதினி, நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்த வெளிப்படையாக பல கருத்துக்களை கூறி வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vinothini Kamal Haasan

கமல்ஹாசன் வினோதினி

தமிழ் சினிமாவின் பிரபல காமொடி மற்றும் குணச்சித்திர நடிகையான வினோதிரி வைத்தியநாதன் நடிகரும் அரசியல் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

Advertisment

2009-ம் ஆண்டு வெளியான கஞ்சீவரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வினோதினி. தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கடல், ஜிகர்தண்டா, பிசாசு, பசங்க 2, அரண்மனை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் சின்னத்திரையில் ஆனந்த ராகம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பணிப்பெண் தோழியாக நடித்திருந்தார்.

நடிப்பு மட்டுமல்லாமல் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி வரும் வினோதினி, நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்த வெளிப்படையாக பல கருத்துக்களை சொல்வதும், அவற்றை கிண்டலடித்து வீடியோ வெளியிடுவதும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த வினோதினி தற்போது அவரின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள வித்தியாசமான ட்விட்டர் பதிவு தற்போதுர் இணையத்தில் ரைலாகி வருகிறது. இந்த பதிவில்,

Advertisment
Advertisements

கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?

அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி. கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?

அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி. கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து.. இந்து மதக்கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?

அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒரு முறை கள்ள ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் debug பண்றதுக்கு காசில்ல சாமி. கடவுள் டு

அஞ்ஞானவாதி: அப்போ பகுத்தறிவு பேசுற கட்சி? அஞ்ஞானவாதி: பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேக்குறாங்க சாமி. அதுலயும் யாகம்லாம் செய்யுறாங்க. கடவுள் டு

அஞ்ஞானவாதி: அப்போ கரப்ஷன்? மதவாதப் பிரிவினை?

அஞ்ஞானவாதி: எந்தப்பக்கம் நடந்தாலும் குரல் கொடுப்பேன் சாமி. கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, அப்போ ஏன் மய்யம்? ஒரு சீட்டுகூட இல்லையே?

அஞ்ஞானவாதி: சீட்டு குலுக்கிப்போட்டு இந்த பதவி எடுத்துக்கோ அந்தப்பதவி எடுத்துக்கோங்குறதுக்கு இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி. சார்ஜ் சீட் செய்யப்பட்ட ஆளுங்களும் இல்லையே சாமி… சீட்டு விளையாடுறத ஆதரிக்கிற கூட்டமும்… கடவுள்: போதும் போதும்… சீட் என்று மூன்று முறைக்கு மேல் சொல்லியதால் நீ ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டாய். அஞ்ஞானவாதி: இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி. ஆரம்பிக்கலாங்களா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: