ரஜினிக்கு உயிர் கொடுத்த சிறுவன்; கமல்ஹாசனுக்கு ரீல் மகன்: இப்போ இவர் இல்லாம கமல் - மணிரத்னம் படமே இல்ல!

1992-ல் தலைவாசல், 1994-ல் மே மாதம், 1995-ல் சதிலீலவதி, ஆசை ஆகிய படங்களில் நடித்திருந்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, 14 வருட இடைவெளிக்கு பிறகு, 2009-ம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்தில முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

1992-ல் தலைவாசல், 1994-ல் மே மாதம், 1995-ல் சதிலீலவதி, ஆசை ஆகிய படங்களில் நடித்திருந்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, 14 வருட இடைவெளிக்கு பிறகு, 2009-ம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்தில முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

author-image
WebDesk
New Update
Anand Krishnamoorthi

தமிழ் சினிமாவில் 90-களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும், இன்றைக்கு நடிகராகவும், சினிமாவில் முக்கிய பிரமுகர்களாகவும் இருக்கின்றனர். அந்த வகையில். அஞ்சலி, தளபதி, மற்றும் கமல்ஹாசனின் சதிலீலாவதி போனற படங்களில் நடித்த ஆனந்த் கிருஷ்ண மூர்த்தி தற்போது தமிழ் சினிமாவில் சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றி வருகிறார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

90-களில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் இயக்குனா மணிரத்னம். 1983-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பல்லவி அனு பல்லவி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், மலையாளத்தில் உனரோ என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு, 1985-ல் பகல் நிலவு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அடுத்து இதய கோயில், மௌனராகம், நாயகன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார்.

அக்னி நட்சத்திரம் படத்திற்கு பிறகு, தெலங்கில் கீதாஞ்சலி என்ற படததை இயக்கிய மணிரத்னம் 1990-ம் ஆண்டு இயக்கிய படம் அஞ்சலி, அஜித் மனைவி ஷாலினி, அவரது தங்கை ஷாமிலி, அண்ணன் ரிச்சர்ட் உள்ளிட்ட பலர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இந்த படத்தில், ஷாலினி நடித்த அஞ்சலி கேரக்டரின் நண்பர் கேரக்டரில் நடித்தவர் தான் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கிய படங்களில் தொடர்ந்து நடித்தார்.

thapapathy Anand

Advertisment
Advertisements

அந்த வகையில் அஞ்சலி படத்திற்கு பிறகு, மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி நடித்திருந்தார். ரஜினிகாந்த் பிறந்தவுடன் அவரது அம்மா அவரை ரயிலில் விட்டுவிடுவார். ரயில் ஒரு இடத்தில் நிற்கும்போது அந்த ரயிலில் தானியங்களை திருட வரும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, குழந்தையாக இருக்கும் ரஜினியை பார்த்து, தூக்கிக்கொண்டு ரயிலில் இருந்து வெளியில் வந்துவிடுவார். ஆனால் போலீஸ் துரத்தியதால், குழந்தையை தண்ணீரில் விட்டுவிட்டு சென்றவிடுவார்.

குழந்தை ரஜினி தண்ணீரில் மிதந்துபோய் ஒரு பாட்டியின் கையில் கிடைப்பார். அங்கிருந்து படத்தின் கதை தொடங்கும். இந்த கதையில், ஆனந்த் கிருஷ்ணமூர்ததிக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும், கதையே அவர் மூலமாகத்தான் தொடரும். அதன்பிறகு 1992-ல் தலைவாசல், 1994-ல் மே மாதம், 1995-ல் சதிலீலவதி, ஆசை ஆகிய படங்களில் நடித்திருந்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, 14 வருட இடைவெளிக்கு பிறகு, 2009-ம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்தில முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

Sathileelavathi Anand

கமல்ஹாசன் நடித்த சதிலீலாவதி திரைப்படத்தில் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி காமெடியில் கலக்கி இருப்பார். ஒரு பக்கம் கேவை சரளா, மறுபக்கம் கமல்ஹாசன் ஆகியோருக்கு இணையாக காமெடியில் அசத்திய இவர், படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சீரியஸாக செய்யும் சேட்டைகள் காமெடியின் உச்சமாக இருக்கும். இப்படி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் கவனிக்கப்படும் நடிகராக இருக்கும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, இப்போது பிரபலமான சவுண்ட் இஞ்சினியராக இருக்கிறார். என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படம் தொடங்கி மன்மதன் அம்பு, விஸ்வரூபம், மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம். பொன்னியின் செல்வன் கடைசியாக வெளியான தக் லைஃப் வரை பல படங்களுக்க சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: