/indian-express-tamil/media/media_files/2025/07/25/palaiyathi-amman-2025-07-25-19-24-16.jpg)
சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் பெரிய ஹீரோ அல்லது ஹீரோயினாக வளர்ந்த பல நடிகர், நடிகைகள் தமிழ் சினிமாவில் உள்ளனர். கமல்ஹாசன் முதல் விஜய் வரை, நடிகை அம்பிகா என பலரும் சினிமாவில் குழந்தை நட்சத்தரமாக நடித்தவர்கள் தான். இதில் ஒரு சிலர் சிறுவயதில் நடித்தவுடன் நடிப்பில் இருந்து விலகிவிடுவார்கள். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை, அக்ஷையா ஜெயாராம்.
தமிழ் சினிமாவில் கடந்த 2000-ம் ஆண்டு, இயக்குனர் ராம.நாராயணன் இயக்கத்தில் வெளியான படம் பாளையத்து அம்மன். ராம்கி நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் திவ்யா உன்னி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அம்மன் கேரக்டரில் மீனா நடித்திருந்த நிலையில், அவருக்கு வில்லனாக நடிகர் சரண்ராஜ் நடித்திருந்தார். அதேபோல் காமெடி கேரக்டரில் நடிகர் விவேக் பகுத்தறிவுடன் காமெடியில் அசத்தியிருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் பக்தி படங்களின் வருகை குறைந்து வந்த காலக்கட்டத்தில் வெளியான இந்த படத்தில், ராம்கி - திவ்யா உன்னி தம்பதி மகள் சத்யா கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை அக்ஷையா ஜெயாராம். மீனா திவ்யா உன்னி இருவருக்கும் இடையே இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்தது. தான் குடும்பத்துடன் பிக்னிக் சென்றிருந்தபோது, குடும்ப நண்பரான ஒரு டாக்டர் மூலம் தனது புகைப்படம் இயக்குனர் ராமநாராயணன் பார்த்து தன்னை சினிமாவில் நடிக்க அழைத்ததாக ஒரு பேட்டியில் அக்ஷையா கூறியுள்ளார்.
மேலும் பக்தி படம் என்பதால் நடிக்க விட்டதாகவும், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் மேற்கொண்டு நடிக்கவில்லை என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ள அக்ஷையா, இந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு ரூ15 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வரும் அக்ஷையா, மீண்டும் சினிமாவில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும், தன்னை நடிக்க வைக்க ஒருசிலர் தன்னை அனுகியதாகவும் அவர்களுக்கு தான் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
பாளையத்து அம்மன் மட்டும் இல்லாமல், படைவீட்டு அம்மன், ராஜகாளி அம்மன், கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட பக்தி படங்களில் நடித்திருந்த உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த இவர், ஜீவா நடித்த ஆசை ஆசையாய், பார்த்திபன் தேவயானி நடித்த அழகி, சரத்குமார் நடித்த தோஸ்த், விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்ஜியம், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அக்ஷையா நடித்துள்ளார். தற்போது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அக்ஷையா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் வெளியிடும பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியதே இல்லை. அதே சமயம், இவர் தான் அந்த குழந்தை நட்சத்திரம் என்பது பலரும் அறியாத ஒரு தகவலாகவே இருக்கிறது. பாளையத்து அம்மன் படத்தில் தான் நடித்த காட்சிகள் தொடர்பான புகைப்படங்களையும் அக்ஷையாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.