Advertisment

தற்கொலை முடிவில் க்ளாசிக் நடிகர் : திடீரென கேட்ட குரல் ; கருமாரியம்மன் பக்தர் பாதிரியார் ஆன கதை!

கருமாரியம்மன் பக்தராக இருந்த ஏ.வி.எம்.ராஜன், இந்த சம்பவத்திற்கு பிறகு தன்னை ஏசுவின் அடிமை என்று சொல்லிக்கொண்டு, கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
AVM Rajan

க்ளாசிக் நடிகர் ஏ.வி.எம்.ராஜன்

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி முன்னணி நடிகராக இருந்த காலக்கட்டத்தில், பல்வேறு படங்களில் நடித்து வளர்ந்து வரும் நாயகர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் ஏ.வி.எம்.ராஜன். இப்போது இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

1935-ம் ஆண்டு ஜூலை மாதம் புதுக்கோட்டையில் பிறந்தவர் ஏ.வி.எம்.ராஜன். சண்முக சுந்தரம் என்ற பெயர் கொண்ட இவர், ஏ.வி.எம்.நிறுவனத்தின் படங்களில் நடித்ததால், தனது பெயரை ஏ.வி.எம்.ராஜன் என்று மாற்றிக்கொண்டார். 1959-ம் ஆண்டு வெளியான சிவகங்கை சீமை என்ற படத்தின் மூலம் ராஜன் தமிழ் சினிமாவில் அறிமகமானார்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்த இந்த படத்தில், ஏ.வி.எம்.ராஜன் நடித்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த நானும் ஒரு பெண் படத்தில் நடித்திருந்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்த இந்த படத்தில் இளம் ஜோடிகளாக ஏ.வி.எம்.ராஜன் –புஷ்பலதா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

அதேபோல், பக்தி படங்களில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வந்த ஏ.வி.எம்.ராஜன், 1975-ம் ஆண்டு வெளியான திருவருள் படத்தில் முருக பக்தராக நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். இந்த படமே அவர் ஹீரோவாக நடித்த கடைசி படமாகும். அதன்பிறகு, சிவாஜி, எம்.ஜி.ஆர், முத்துராமன், ஆகியோரின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த ராஜன், ரஜினிகாந்தின் பில்லா படத்தில் போலீ்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராக களமிறங்கிய ஏ.வி.எம்.ராஜன், சிவாஜி நடிப்பில் ஊரும் உறவும், லாரி டிரைவர் ராஜா கண்ணு, அர்ஜூன் தமிழ் சினிமாவில் அறிமுகமான நன்றி ஆகிய படங்களை தயாரித்திருந்தார். பட தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்த ஏ.வி.எம்.ராஜன், கடனாளியாக மாறிய நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அதற்காக நேரத்தையும் குறித்துவிட்டு அதற்காக காத்திருந்துள்ளார்.

அப்போது ஒரு அசரீரி குரல் ஒன்று அவரை பெயர் சொல்லி அழைத்துள்ளது. நீங்கள் யார் என்று கேட்டபோது, சிறுவயதில், உனக்கு நான் பாட்டு சொல்லி கொடுத்திருக்கிறேன். நீ நன்றாக பாடுவாய். சிறுவயதில் நீ வரும் சர்ச் ஃபாதர் நான் என்று சொல்ல. உங்களுக்கு என்ன வேண்டும் என்று ஏ.வி.எம்.ராஜன் கேட்க, நீ தற்கொலை செய்துகொள்ள கூடாது. உனக்கு துணையாக ஏசு இருக்கிறார் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

மறுநாள், ஏ.வி.எம்.ராஜன் வீட்டுக்கு வந்த கடன்காரர்கள், அவரை அழைத்து சென்று கணக்கு பார்த்து அவரது கடன் அதிகம் இல்லை என்று அவருக்கு தொல்லை தருவதை விட்டுள்ளனர். உண்மையில் கருமாரியம்மன் பக்தராக இருந்த ஏ.வி.எம்.ராஜன், இந்த சம்பவத்திற்கு பிறகு தன்னை ஏசுவின் அடிமை என்று சொல்லிக்கொண்டு, கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளார். தற்போது அவர் சென்னையில் ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருக்கிறார் என்று ஓஎச் சினிமா என்ற யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment