தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ள நடிகர் கார்த்திக், சொந்த கிராமம், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் கார்த்திக். இந்த படத்திற்கு பின் மணிரத்னம் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களில் இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த கார்த்திக், தற்போது தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான, பிரஷாந்தின் அந்தகன் படத்தில் நடிகர் கார்த்திக் கேரக்டரிலேயே நடித்திருந்தார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. க்ளாசிக் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக்கின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள, ஒக்கநாடு மேலையூர் என்ற கிராமம் தான். கார்த்திக் தந்தை முத்துராமன் இந்த ஊரில் தான் பிறந்துள்ளார்.
முத்துராமனின் உறவினர்கள் பலரும் இப்போது இந்த ஊரில் வாழ்ந்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் ரத்னாவதி தம்பதிக்கு 1929-ம் ஆண்டு மூத்த மகனாக பிறந்தவர் தான் முத்துராமன். நாடக நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய முத்துராமன், 1956-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான ரங்கோன் ராதா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமகமானார். எம்.ஜி.ஆர் சிவாஜி, ஜெயலலிதா ஆகியோருடன் நடித்துள்ள முத்துராமன், ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
Advertisment
Advertisements
இவருடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள், ஒரு சகோதரி. சகோதரி தங்கள் சொந்த கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் செய்துகொண்டார். சகோதரர்கள் இருவரும் அக்கா தங்கை இருவரை திருமணம் செய்துகொணடனர். முத்துராமன் உயிருடன் இந்த காலக்கட்டத்தில் அவர் தனது சொந்த ஊருக்கு யாரையாவது பார்க்க சென்றால் விடமாட்டார்களாம். கோவில் கும்பாவிஷேகத்தின்போது கோவில் கலசத்தில் கழற்றிப்போட்ட மோதிரத்தை முத்துராமன் திரும்ப வாங்கிக்கொண்டு சென்றுவிட்டதை இந்த ஊர்க்காரர்கள் குற்றமாக எடுத்துக்கொண்டதே இதற்கு காரணமாம்.
கிராமத்தில் இருந்த முத்துராமனின் வீடு நிலம் என் அனைத்தையும் விட்டுவிட்டார்களாம். முத்துராமன் உறவனர் முறையான ஒரு பாட்டி இந்த ஊரில் இருப்பதாகவும், முத்துராமனின் வீடு இருந்த இடம் தற்போது தரைமட்டமாக உள்ளதாகவும், இந்த ஊர் கோவில் கும்பாவிஷேகத்திற்கு முத்துராமன் வந்துள்ளார். ஆனால் அவரது மகன் கார்த்திக் மற்றும் பேரன்கள் யாருமே இந்த ஊர் பக்கமே வந்தது இல்லையாம். கார்த்திக்கின் உறவினர் ஒருவர் சொந்த கிராமத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தபோது கண்டிப்பாக வருகிறேன் என்று சொன்னாராம் கார்த்திக். இந்த தகவல் பிரேக்கிங் வோல்க்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.