தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். 1917-ம் ஆண்டு இலங்கையில் பிறந்த இவர், 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
Advertisment
அதனைத் தொடர்ந்து பல படங்களில் கேரக்டர் நடிகராக உயர்ந்த எம்.ஜிஆர்.தமிழ் சினிமாவின் தவிர்க் முடியாத நாயகான வளர்ந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் தயாரிப்பு என பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் அரசியலில் கால்பதித்தார் தொடக்கத்தில் திமுகவில் இருந்த அவர், கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து பிரிந்து தனியாக அதிமுகவை தொடங்கினார்.
அதிமுக தொடங்கியது முதல் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். இன்றைய காலட்டத்தில் எம்.ஜி.ஆர் இல்லை என்றாலும், அவருக்காக அதிமுகவிற்கு ஓட்டு போடும் தொண்டர்களும், அவர் படங்களை டிவியில் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் கூட்டமும் இன்னும் இருக்கதான் செய்கிறது.
அதேபோல் எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தால் அழியாதது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் திரைத்துறையினர் கூட தங்களது மேடை பேச்சுகளில் எம்.ஜி.ஆர். பற்றி பேசாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் குறித்து நடிகர் எம்.என்.நம்பியார் பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Advertisment
Advertisements
எம்.ஜி.ஆர் திரைத்துறையில் நடித்து வந்த காலகட்டத்தில் அவரின் பல படங்களில் வில்லனாக நடித்தவர் நம்பியார். இது குறித்து பேசியுள்ள நம்பியார், ஒருமுறை நான் கார்ல போய்க்கிட்டு இருக்கும்போது நாளைந்துபேர் காரை நிறுத்தினார்கள். அவர்களிடம் என்னப்பா என்று கேட்டேன். அப்போது அவர்கள் எப்படி நீ எங்க அண்ணனை அடிக்கலாம் என்று கேட்டார்கள்.
நீ யாரப்பா உன்னையே எனக்கு தெரியாது உங்க அண்ணனை எப்படி எனக்கு தெரியும் என்று கேட்டேன். ஏன்யா எங்க அண்ணனை தெரியாதா உனக்கு என்று அவர்கள் கேட்க நான் மீண்டும் தெரியாது என்று சொன்னேன். அதற்கு அவர்கள் மக்கள் திலகத்தை தெரியாதா என்று கேட்டார்கள். எம்.ஜி.ஆரையா என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆமாய என்று சொன்னார்கள். அதற்கு நான் ஏம்மா அதுக்குதானே எனக்கு காசு கொடுக்கிறார்கள் என்று சொன்னேன்.
ஆனால் அவர்கள் காசு கொடுத்தா யார வேனாலும் அடிப்பியா என்று கேட்டார்கள். ஏம்மா அவரு என்ன அடிச்சாரே நீங்க அதை பார்க்கலையா என்று நான் கேட்க அவர் அடிக்கலாம்யா நீ எப்படி அவரை அடிக்கலாம். என்று கேட்டார்கள். சரி இவர்களிடம் தகராறு பண்ணி பிரயோஜனம் இல்லை நான் தனியா இருக்கேன். இவங்கா நாளைந்து பேர் இருக்காங்க.
அதன்பிறகு சரி இப்ப என்னப்பா சொல்ற என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இனிமேல் நீங்கள் நீ அவரை அடிக்க கூடாது என்று சொன்னார்கள். அவ்வளவு தானே இனிமேல் அடிக்க மாட்டேன் என்று சொன்னேன். அதன்பிறகு மரியாதையுடன் போய்ட்டு வாங்க சார் நம்பியாருக்கு ஜே என்று சொன்னார்கள். இதுதான் அவருடைய ரசிகர்களின் எண்ணம்.
அவரை அடிக்கும்போது அடிக்காதே என்று சொன்ன ரசிகர்கள் அவர் என்னை அடிக்கும்போது பத்தாது பத்தாது இன்னும் அடி என்று சொல்கிறார்கள் என்று கூறியுள்ளார். பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil