New Update
/indian-express-tamil/media/media_files/LROmejNyJEb3a48BSQZC.jpg)
நடிப்பு பல்கலைகழகம்
நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த ஒரு பழபம்பெரும் நடிகரின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் யார்னு தெரியுதா?
நடிப்பு பல்கலைகழகம்
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், பெரும்பாலான மக்கள் சமூகவலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை கவரும் வகையில் அவ்வப்போது சில சுவாரஸ்யமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக, சினிமா ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
இந்த மாதிரியான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக அந்த புகைப்படங்கள் குறித்த தகவல்களை தேடி வருவார்கள். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நடிப்புக்கே இலக்கணம் என்று போற்றப்பட்ட இந்த நடிகர், தனது வாழ்நாளில் இறுதிவரை நடிப்பில் தனது திறமையை நிரூபித்து வந்தவர். மேலும், சிறுவயதிலேயே நாடகங்களில் நடித்து நடிப்பு பயின்ற இவர், தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமானார்.
அறிமுக படம் தொடங்கி அடுத்தடுத்து பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இவர், சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். முன்னணி இயக்குனர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், ஒரு கட்டத்தில் அடுத்த தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினார். அந்த நடிகர் யார் என்பது உங்களுக்கு தெரிகிறதா? அவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானா. முதல் படமே அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த, சிவாஜி கணேசன், நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்பட்டார். மேலும் ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன், உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சிவாஜி கணேசனின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் சிவாஜி கணேசா? என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.