சக நடிகர் உடல் நிலை சரியில்லாதபோது அவருக்கான வேண்டிக்கொண்டு நடிகரும் தயாரிப்பாளருமான தேங்காய் சீனிவாசன் திருப்பதிக்கு நடந்தே சென்றுள்ளார்.
சினிமாவில் ஒரு நடிகருக்கும் மற்றொரு நடிகருக்கும் போட்டி இருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒரு ஆழமான நட்பும் இருந்துள்ளது. தற்போது டிஜிட்டல் சினிமாவில் இந்த நட்பு வட்டாரம் சிறியதாக இருந்தாலும் டெக்னாலஜி வசதிகள் இல்லாத அந்த காலத்தில் நடிகர்கள் பலரும் நட்பு பாராட்டி வந்துள்ளது.
அதற்கு முக்கிய சான்று நடிகர் தேங்காய் சீனிவாசன். 1965-ம் ஆண்டு வெளியான ஒரு விரல் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் தேங்காய் சீனிவாசன். மேடை நாடகங்களில் நடிக்கும்போது ஒருமுறை தேங்காய் வியாபாரி கேரக்டரில் நன்றாக நடித்ததற்காக பாராட்டப்பட்ட இவர் அன்றுமுதல் தேங்காய் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர்-ன் தீவிர ரசிகரான தேங்காய் சீனிவாசன் தான் எம்.ஜி.ஆருடன் நடித்த அத்தனை படங்களிலும் அவருடன் வரும் ஒரு முக்கிய கேரக்டரிலேயே நடித்து வந்தார் மேலும் அனைத்து படங்களிலுமே எம்.ஜி,ஆரை புகழ்ந்து பேசும் ஒரு நபரக நடித்து வந்த தேங்காய் சீனிவாசன் சிவாஜி, முத்துராமன், ஜெமினிகணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அதேபோல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த் தில்லு முள்ளு படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக திரைத்துறையில் அனைவருடனும் நெருங்கி பழகும் தேங்காய் சீனிவாசன் நடிகர் வென்னிற ஆடை மூர்த்தியுடன் ஆழமான நட்பு கொண்டிருந்தார்.

ஒருமுறை வென்னிற ஆடை மூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது மிகவும் கவலையடைந்த தேங்காய் சீனிவாசன் தனது நண்பன் வென்னிற ஆடை மூர்த்திக்கு உடல்நிலை சரியாக வேண்டும் என்று கூறி திருப்பதிக்கு நடந்தே சென்றுள்ளார். இந்த தகவலை சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வென்னிற ஆடை மூர்த்தி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தேங்காய் சீனிவாசன் என்னுடைய நெருங்கிய நண்பன். நாங்கள் இருவரும் ஷூட்டிங்கில் இருந்ததாலும் எங்கு இருந்தாலும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம். ஒருமுறை எனக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது என்னை பார்க்க வந்த தேங்காய் சீனிவாசன் டேய் நீ சாக கூடாது எனக்கு அப்புறம் நீதான் என்று சொல்லிவிட்டு திருப்பதிக்கு நடந்தே சென்றான். வெங்கடேஷ்வரா பக்தி ரொம்ப ஜாஸ்தி அவனுக்கு.
திருப்பதிக்கு நடந்தே சென்று தரிசனம் முடிந்து திரும்பி வந்து டேய் நல்லா இருப்ப. நடந்து போய்ட்டு வந்துவிட்டேன். பெருமாள் உன்னை கைவிட மாட்டார். அப்போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டுது என்று சொல்லும் வென்னிற ஆடை மூர்த்தி கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். மேலும் ரொம்ப நல்லவன் சார் அவன். நான் அழுதது அவனுக்காகத்தான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/