எம்.ஜி.ஆர் – சிவாஜி என க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நடிகை சரோஜா தேவி, படப்பிடிப்பு தாமதமாக வந்ததால், ஒரு படமே கைவிடப்பட்டது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, சிவாஜி கணேசன் நடிப்பில் கே. சோமு இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் தான் ஜீவ பூமி. சிவாஜி சரோஜா தேவி இணைந்து நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், ஒருநாள் சிவாஜி, சரோஜா தேவி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருந்தது.
இந்த காட்சியின் படப்பிடிப்புக்காக, படக்குழு அனைவரும் தயாராக இருந்த நிலையில், சிவாஜி வழக்கம்போல் காலை 8 மணிக்கு மேக்கப்புடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார். ஆனாலும் மதியம் ஒரு மணிவரை படத்தின் நாயகியான சரோஜா தேவி வரவே இல்லை. படத்தின் நாயகி சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிடிப்புக்கு வரவில்லை என்றாலும் இதற்கு சிவாஜி தரப்பில் இருந்து எவ்வித கோபமோ, அல்லது வேறு எந்த உணர்ச்சியுமே கட்டவில்லை.
ஆனாலும், படத்தின் இயக்குனர் கே.சோமு உடனாயாக சரோஜா தேவிக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்திய நிலையில், சிவாஜியிடம் சொல்லிவிட்டு, அன்றைய தினத்தின் படப்பிடிப்பை உடனடியாக ரத்து செய்துவிட்டார். சரோஜா தேவி படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் என்னால் எப்படி படப்பிடிப்பை நடத்த முடியும் என்று படத்தின் தயாரிப்பாளரிடம் இயக்குனர் சோமு கூறியுள்ளார்.
அன்று ஒருநாள் நடந்த அந்த படத்தின் படப்பிடிப்பு அதன்பிறகு நடைபெறவே இல்லை. ஜீவபூமி என்ற திரைப்படம் ரசிகர்களால் பார்க்க முடியாமல் போனது என்றால் அதற்கு முக்கிய காரணம் நடிகை சரோஜா தேவி தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“