க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த சரோஜா தேவிக்கு உடைகள் அளவெடுத்து தைக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு ஒரு சிலையே செய்து வைத்துள்ளார் அவரின் காஸ்டியூம் டிசைனர்.
கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட சரோஜா தேவி, மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்து ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா கூறியுள்ளார்.
அவரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அடுத்து ஒரு படத்தில் நடித்த சரோஜா தேவி, மீண்டும் பெங்களூர் சென்று தனது பள்ளி படிப்பை தொடர முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில், தமிழ் இயக்குனரான கே.சுப்பிரமண்யம், தான் கன்னடத்தில் இயக்க உள்ள கட்ச தேவயானி என்ற படத்தில் சரோஜா தேவி நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட, அம்மாவின் வற்புறுத்தலால் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சரோஜா தேவி அந்த படத்தில் நடித்திருந்தார்.
இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. அதன்பிறகு தான், தமிழில் திருமணம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து சிவாஜியின் தங்கமலை ரசகியம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான செங்கோட்டை சிங்கம் படம் தான் சரோஜா தேவி நாயகியாக நடித்த முதல் படம்.
அதன்பிறகு திருடாதே படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த சரோஜா தேவி, அடுத்து எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய நடித்த நாடோடி மன்னன் திரைப்படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத:து ஏ.வி.எம். தயாரிப்பில், அன்பே வா படத்தில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆர் முற்றிலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், எம்.ஜி.ஆர்.- சரோஜா தேவி காம்போவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த்து.
இந்த படத்தில் சரோஜா தேவி நடித்துக்கொண்டிருக்கும்போது, படத்தை தயாரித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், பெங்களூருவுக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு இநதி படத்தை பார்த்த அவர், அந்த படத்தில் நாயகி அணிந்திருந்த உடை மாதிரி சரோஜா தேவிக்கு ஒரு உடை ரெடி பண்ண வேண்டும் என்று அவரின் கஸ்டியூம் டிசைனர் டைலர் ரஹ்மானை கூப்பிட்டு பெங்களூருவுக்கு சென்று அந்த படத்தை பார்க்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி பெங்களூருவுக்கு சென்று படத்தை பார்த்துவிட்டு திரும்பிய, டைலர் ரஹ்மான், சரோஜா தேவி போலவே ஒரு சிலை செய்து அதில் உடைகளை அணிவித்து தைத்துவிட்டு அளவு சரியாக இருந்தால் அதன்பிறகு சரோஜா தேவியிடம் கொடுத்து அணிந்து வர சொல்வாராம். அதேபோல் இந்த உடைகளுக்கான துணிணை எடுத்து எனது சிலையில் அளவு வைத்து தைத்து கொடுத்தார். அன்பே வா படத்தின் ஒரு பாடல் காட்சியில் அந்த உடை அணிந்திருப்பேன் என்று சரோஜா தேவியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“