தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவர் சந்திரபாபு. தனது டைமிங் லைலாக், ஆடல் பாடல் என சிறப்பாக நடிப்புதிறனை கொண்ட சந்திரபாபு பல படங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார். அதேபோல் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள சந்திரபாபுக்கு பயந்து எம்.ஜி.ஆர் தனது அறை கதவை பூட்டிக்கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.
நடிப்பு வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆரை அவரது வீட்டில் சந்தித்த சந்திரபாபு, தனக்கு நன்றான ஆட தெரியும் பாடவும் தெரியும் என்று கூறி டான்ஸ் ஆட தொடங்கியுள்ளார். இதை பார்த்த எம்.ஜி.ஆர் நான் என்ன பட தயாரிப்பு கம்பெனியா வச்சிருக்கேன் இல்ல இயக்குனரா? இயக்குனர் இல்லனா தயாரிப்பு நிறுவனத்திடம் வாய்ப்பு கேளு என்று அனுப்பியுள்ளார்.
அப்போது மற்றகாமல் சந்திரபாவுன் முகவரியை வாங்கி வைத்துக்கொண்ட எம்.ஜி.ஆர் தனது பட ஷூட்டிங்கின்போது என்.எஸ்.கிருஷ்ணனிடம் ஒரு பையன் வந்தான் அவனுக்கு திறமை இருக்கு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்திரபாபு அங்கே வந்தார். அவரை பார்த்த எம்.ஜி.ஆா அந்த பையன் தான் என்று சொல்ல என்.எஸ்.கே அவரை அழைத்து விசாரித்துள்ளார்.
எனக்கு நடிக்க வேண்டும் என்று ஆசை, ஆடல் பாடல் எல்லாம் தெரியும் எங்க அப்பா வேற வேலையை பாரு என்று சொல்லிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல, சரி என்று சொன்ன என்.எஸ்.கே ஒரு பால்காரன் பால் கறந்து சென்று ஊற்றும்போது என் பால் தண்ணியாட்டம் இருக்கு என்று சொல்கிறார்கள். இதை எப்படி நடிப்பே என்று கேட்க, மாடு சொம்பு எதுவும் இல்லாமல் சந்திரபாபு நடித்துள்ளார்.
பாலை கறந்து என்.எஸ்கேவிடம் கொடுக்க, என்ன பால் தண்ணியாட்டம் இருக்கு தண்ணி கலந்தியா என்று கேட்க, இல்லை அய்யா நான் பாலில் தண்ணீர் கலப்பதில்லை. தண்ணீரில் தான் பாலை கலப்பேன் என்று சொலல் அனைவரும் சிரித்துள்ளனர். அதன்பிறகு அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தை தொடர்ந்து குலேபகாவலி என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருந்தார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது காமெடியின் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் சந்திரபாபு, எம்.ஜி.ஆரை கூட கிண்டல் செய்வாராம். அதே போல் எம்.ஜி.ஆரும் அவரை கிண்டல் செய்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்களில் காமெடி பேசப்பட்ட நிலையில், சில படங்கள் சந்திரபாபுவின் நடிப்புக்காகவே பார்க்கலாம் என்று விமர்சனங்கள் வந்தது.
இதனால் சந்திரபாபுவை என் படங்களில் கமிட் செய்ய வேண்டாம் என்று எம்.ஜி.ஆர் சொன்னதாக தகவல் பரவினாலும், தான் இயக்கி தயாரித்த நாடோடி மன்னன் படத்தில் சந்திரபாபுவுக்கு தேடி சென்று வாய்ப்பு கொடுத்தவர் எம்.ஜி.ஆர். குலேபகாவலி படத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆர் சந்திரபாபு இருநரும் புதுமைபித்தன் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பெண் வேடத்தில் வருவார்.
இதற்காக அவர் மேக்கப்போடும்போது, திடீரென அவரது அறைக்கதவு வேகமாக தட்டப்பட்டுள்ளது. இதை கேட்ட எம்.ஜி.ஆர் நிச்சயமாக இரு சந்திரபாபுதான். அவன் உள்ளே வந்தால் என்னை உண்டு இல்லனு பண்ணிடுவான் என்று நினைத்த எம்.ஜி.ஆர் அந்த அறையின் கதவில் இருந்த மற்றொரு தாழ்பாலையும் பூட்டியுள்ளார். ஆனாலும் விடாத சந்திரபாபு பின்பக்கம் வழியாக அந்த அறைக்குள் குதித்துள்ளார்.
சந்திரபாபுவிடம் இருந்து இருந்து எம்.ஜி.ஆரை காப்பாற்ற அந்த படத்தின் தயாரிப்பாளர் படாதபாடு பட்டுள்ளார். புதுமை பித்தன் படத்தின் காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், அதன்பிறகு எம்.ஜி.ஆர் – சந்திரபாபு கூட்டணியில் பல படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.