16 வயதினிலே சப்பாணியை மெருகேற்றிய பாக்யராஜ்: குருவுக்கே பாடம் சொன்ன சிஷ்யன்; க்ளாசிக் ப்ளாஷ்பேக்!

பாரதிராஜாவின் முதல் படமாக 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசன் நடித்த சப்பாணி கேரக்டரை பாக்யராஜ் மெருகேற்றியுள்ளார்.

பாரதிராஜாவின் முதல் படமாக 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசன் நடித்த சப்பாணி கேரக்டரை பாக்யராஜ் மெருகேற்றியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Bharathi raja Bhagyara

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்தில் உதவியாளராக இருந்த இயக்குனர் கே.பாக்யராஜ் முதல் படத்திலேயே தனது குருநாதர் பாக்யராஜூக்கு கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளியான படம் 16 வயதினிலே. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தில் உதவியாளராக பணியாற்றிய இயக்குனர் கே.பாக்யராஜ், படத்தின் சீன் பேப்பரை படித்துள்ளார். அவரிடம் பாரதிராஜா என்னயா சீன் படிச்சியா, நல்லாருக்கா என்று கேட்க, சூப்பரா இருக்கு சார் என்று பாக்யராஜ் கூறியுள்ளார். முதல் படம் என்று அப்பா சொல்லாத, உனக்கு என்ன தோனுதோ அதை சொல் என்று கேட்க, இல்லை சார் நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.

அதன்பிறகு உனக்கு என்ன தோணுது எதாவது தோன்றினால் சொல்லு என்று சொல்ல, எனக்கு ஒன்று தோணுது சார் என்று சொன்ன பாக்யராஜ் இந்த படத்தில் கமல்ஹாசன் பெயர் சப்பாணி, ஆனால் அவர் சதாரணமான மயிலு நான் சந்தைக்கு போய்ட்டு வரேன் உனக்கு எதாவது வேண்டும் என்றால் சொல் என்று சொல்கிறார். இது சரியில்லை. சப்பாணி என்ற பெயரக்கு தகுந்த மாதிரி அவர் சற்று குளறியபடி பேசினால் தான் சரியாக இருக்கும் என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

இதை ஏற்றுக்கொண்ட பாரதிராஜா பாக்யராஜூவை 3 சீசன்கள் குளறியடி பேசுமாறு கூறியுள்ளார். பாக்யராஜூவும் அப்படியே பேச, அதை போய் சூப்பர்யா சப்பாணி கேரக்டரே இப்போ தான் சரியாக இருக்கிறது என்று பாரதிராஜா சொல்ல, படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் கையில் சீன் பேப்பரை கொடுத்து டேக் எடுத்துள்ளனர். கமல்ஹாசன், சாதாரணமாக பேசியுள்ளார். இதை பார்த்த பாரதிராஜா பாக்யராஜூவை பார்த்துவிட்டு ஒன்மோர் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் மீண்டும் அதே மாதிரி பேசியுள்ளார்.

இப்போது திரும்பவும், பாக்யராஜூவை பார்த்த பாரதிராஜா ஒன்மோர் என்று சொல்ல, கமல்ஹாசன், நீங்கள் அடுத்து எடுத்தாலும் நான் அதையே தான் பேசுவேன் என்ன பிரச்னை சொல்லுங்க என்று சொல்ல, பாக்யராஜ் சொன்னதை பாரதிராஜா கமல்ஹாசனிடம் கூறியுள்ளார். இதை கேட்ட கமல்ஹாசன், பாக்யராஜூவை தனியாக அழைத்து சென்று, நடித்து காட்டுமாறு கூறியுள்ளார். அதே போல் 3 சீன்களை பாக்யராஜ் நடித்து காட்ட, புரிந்துகொண்ட கமல் போய் டேக் சொல்லு என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்க கமல்ஹாசன் சப்பாணியாக சிறப்பாக நடித்துள்ளார். பாரதிராஜாவும் ஹேப்பியாக டேக் ஓகே செய்துள்ளார். இதை கமல்ஹாசனிடம் சொல்ல, அவரோ நீ என்ன எதிர்பார்க்கறனு சொன்னதான் தெரியும் சீன் பேப்பரை மட்டும் கையில் கொடுத்துவிட்டால் எப்படி என்று கேட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Bharathiraja Kamal Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: