தமிழ் சினிமா தொடங்கியது முதல் இன்றுவரை நடிகர் நடிகைகளுக்கு படப்பிடிப்பு தளத்தில் தேவையானவற்றை வாங்கி தர வேண்டியது தயாரிப்பாளரின் வேலையாக உள்ளது. க்ளாசிக் சினிமா காலக்கட்டத்தில் இந்த முறை அதிகமாக இருந்தது. அப்போது தயாரிப்பாளர்ங்கள் பலரும் இணைந்து மூவி மேக்கர்ஸ் கவுன்சில் தொடங்கி இனி நடிகர்களுக்கு சிகரெட் போன்ற பொருட்களை வாங்கி கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டனர்.
இந்த முடிவு குறித்து நடிகர்களுக்கு எதும் தெரிவிக்கபடவில்லை. இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கு மறுநாள் நடிகர் நாகேஷ் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே ஒரு பையனை அழைத்து எங்கப்பா சிகரெட் என்று கேட்க, தயாரிப்பாளர் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இது குறித்து தயாரிப்பாளர் கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இதை கேட்ட நாகேஷ் சரி நீ போப்பா என்று சொல்லிவிட, படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் நாகேஷ் ஆளை காணவில்லை. படப்பிடிப்பு தளம் முழுவதும் அவரை தேடியபோதும், அவர் கிடைக்காத நிலையில், 2 மணி நேரம் கழித்து நாகேஷ் அங்கே வந்துள்ளார். இதை கவனித்த தயாரிப்பு நிர்வாகிகள் எங்க போனீங்க உங்களாக படப்பிடிப்பு 2 மணி நேரம் லேட் என்று கூறியுள்ளனர்.
இதை கேட்ட நாகேஷ் நீங்கள் சிகரெட் கொடுக்க முடியாது என்று சொல்லிட்டீங்க ஆனால் நான் செயின் ஸ்மோக்கர் என்று உங்களுக்கே நன்றாக தெரியும். அதனால் ஒரு டாக்சி எடுத்துக்கொண்டு சிகரெட் வாங்க போனேன். அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரியுது டாக்சிக்கு பணம் இல்லை. அதனால் வீட்டுக்கு போய் பணம் எடுத்து கொடுத்துவிட்டு இங்கே வருவதற்கு லேட் ஆகிவிட்டது என்று சாதாரணமாக கூறியுள்ளார்.
நாகேஷின் விளக்கத்தை கேட்ட, தயாரிப்பு நிர்வாகி மற்றும் இயக்குனர் இருவரும் தயாரிப்பாளரிடம் சென்று நடந்ததை கூற அதிர்ச்சியடைந்த அவர், இனி அவருக்கு கட்டப்பாடு இல்லை என்று சொல்லுங்கள் அவர் என்ன கேட்டாலும் வாங்கி கொடுங்கள் என்று கூறியுள்ளார். அந்த தயாரிப்பாளர் தான் ஏ.வி.எம் நிறுவனர் மெய்யப்ப செட்டியார். தயாரிப்பாளர்கள் பலர் இணைந்து கொண்டுவந்த விதியை நாகேஷ் ஒரு நெடியில் காலி செய்துவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“