Advertisment
Presenting Partner
Desktop GIF

நாகேஷ் பட வாய்ப்புக்காக போராடிய நடிகர் : ஆரம்ப காலம் அவ்வளவு ஈஸியா இல்லை

தனது படத்தில் நடித்த நாகேஷ்க்கு மேலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் பிரபல நடிகர் ஒருவர் தனது சம்பளத்தை குறைக்க முன்வந்துள்ளார்

author-image
WebDesk
New Update
Nagesh

நடிகர் நாகேஷ்

இன்றைய கால சினிமா கலையை நோக்கி இல்லாமல் பணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக பலரும் விமர்சித்து வருகிறனர். அதேபோல் நடிகர்களின் சம்பளமும் கோடிகளில் புரண்டுகொண்டிருக்கிறது. நடிகர்கள் தங்களது சம்பளத்தை எவ்வளவு உயர்த்தினாலும் அதனை கொடுப்பதற்கு திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாராக உள்ளனர். இதன் காரணமாக மற்ற நடிகர்களை பார்த்து தனது சம்பளத்தை உயர்த்தும் நடிகர்களும் இருக்கிறார்கள்.

Advertisment

ஆனால் தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு சக நடிகருக்கு வாய்ப்பு கொடுக்கும் நடிகர்கள் இப்போது இருக்கிறார்களா என்றால் இல்லை என்ற பதில் தான் வரும். இதற்காக தான் சினிமாதுறையின் பொற்காலம் க்ளாசிக் சினிமா காலம் தான் என்று சொல்வார்கள். அப்போது கேரவன் கிடையாது. முன்னணி நடிகர்களாக இருந்தாலும் துணை நடிகர்களாக இருந்தாலும் பாகுபாடு இல்லாமல் நெருங்கி பழகும் சூழல் இருந்தது.

அதேபோல் மற்ற நடிகர்களுக்க வாய்ப்பு கேட்பதும், விட்டுக்கொடுக்கும் ஆரோக்கியமான சூழலும் இருந்துள்ளது. அந்த வகையில், நடிகர் நாகேஷூக்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு அவருக்கு ஒரு நடிகர் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடியால் மட்டுமல்லாமல் தனது உடல்மொழியாலும் ரசிகர்களை சிரிக்க ரசிக்க வைத்தவர் நாகேஷ். நாகேஷ் சினிமாவிற்கு வந்த காலத்தில் சினிமா நடிகர்கள் இடையே விட்டக்கொடுக்கும் மனப்பான்மை கடலளவு இருந்தது.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நாடகங்களில் நடித்து வந்த நாகேஷ், ரயில்வே துறையினால் நடத்தப்பட்ட ஒரு நாடகத்தில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஒருவராக நடித்திருந்தார். இந்த நாடகத்தில் நாகேஷின் நடிப்பை பார்த்த எம்.ஜி.ஆர் அவரை வெகுவாக பாராட்டியிருந்தார். அதன்பிறகு பல நாடகங்களில் நடித்த நாகேஷ்க்கு 1958-ம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகரும் தயாரிப்பாளருமாக கே.பாலாஜி நடிப்பில் வெளியான மனமுள்ள மறுதராம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்திற்கு நாகேஷ் சிறிய வேடத்தில் நடித்திருந்த நிலையில், படம் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு தாயில்லா பிள்ளை என்ற படத்தில் நடித்து தனக்கான வெற்றியை தேடிக்கொண்டார். முத்துராமன் தேவிகா இணைந்து நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படம் நாகேஷ்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை கொடுத்தது. அதன்பிறகு காதலிக்க நேரமில்லை படகோட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் 1964-ம் ஆண்டு வெளியான சர்வர் சுந்தரம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படி வெற்றிகராமான நடிகராக உயர்ந்த நாகேஷ், முதல் படத்திற்கு பிறகு வாய்ப்பு இல்லாமல் அலைந்துகொண்டிருந்தபோது, அவருக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரும் இயக்குனருமான கே.பாலாஜி தன்னிடம் படத்திற்காக வரும் தயாரிப்பாளர்களிடம், என்னுடைய சம்பளத்தை குறைத்துக்கொள்ளுங்கள் நாகேஷ்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளர்களோ உங்களுக்கு சம்பளம் வேண்டுமானால் அதிகமாக தருகிறோம். ஆனால் நாகேஷ்க்கு வாய்ப்பு தர முடியாது கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News actor nagesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment