தமிழ் சினிமால் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பி.யூ.சின்னப்பா. 1936-ம் ஆண்டு வெளியான சந்திரகாந்தா என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய அவர், பஞ்சாப் கேசரி, அநாதை பெண், உத்தமபுத்திரன், ஆரியமாலா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் - பி.யூ சின்னப்பா போட்டிபோட்டு நடித்துக்கொண்டிருந்த காலக்கட்டம்.
இந்த காலக்கட்டத்தில் உங்களுடன் நடித்த நடிகைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதி தர வேண்டும் என்று ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த பி.யூ.சின்னப்பா அந்த கட்டுரையை எழுதிக்கொண்டு சென்னை வந்துள்ளார். குறிப்பிட்ட அந்த பத்திரிக்கை அலுவலகத்தின் வாசலில் காரை நிறுத்தி இறங்கிய அவரை பார்த்ததும், அந்த பத்திரிக்கை ஆசிரியர் ஓடோடி வந்து வரவேற்பு கொடுத்துள்ளார்.
அப்போது அவரிடம் கட்டுரையை கொடுத்த பி.யூ.சின்னப்பா தனது காரில் இருந்த ஒரு பெண்ணை பார்த்து இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டுள்ளார். நல்லா தெரியுமா நடிகை சகுந்தலா தானே என்று கூறியுள்ளார். ஆமாம் அவர் தான். நான் நடித்த பிரித்விராஜ் திரைப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த படத்தில் பிரித்விராஜ் நாயகியை தேரில் கடத்திக்கொண்டு போய் திருமணம் செய்துகொள்வார்.
அதேபோல் நான் இவரை காரில் கடத்தி கொண்டுபோய் திருமணம் செய்துகொண்டேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட அந்த பத்திரிக்கை ஆசிரியர் அதிர்ச்சியில் உரைந்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் அதிகமாக இருந்து வந்தாலும் 1940-களிலே இதை செய்து காட்டியவர் அன்றைய கால சூப்பர் ஸ்டார் பி.யூ சின்னப்பா. இது குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் இயக்குனரும் பத்திரிக்கையாளருமாக சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“