தமிழ் சினிமா உலகில் ஆச்சி என்று அழைக்கப்படும் மனோரமா சினிமா உலகில் 1500 படங்களுக்கு மேல் நடித்து யாரும் எட்டாத உச்சத்தை எட்டியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். க்ளாசிக் சினிமாவில் அறிமுகமாகி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மனோரமாக அனைவருடனும் எளிமையாக பழகும் மனம் கொண்டனர்.
நாடகங்களில் நடித்து திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய மனோரமா, 1958-ம் ஆண்டு மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவர் அறிமுகமான முதல் படம் ஊமையன் கோட்டை. எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்த இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய கண்ணதாசன் அவரே தயாரித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த படத்தில் மனோரமா ஒற்றன் கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது. அதன்பிறகு படமும் கைவிடப்பட்டது. இதனால் முதல் படம் பாதியில் நின்றதால் விரக்தியடைந்த மனோரகமா கண்ணதாசன் மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளார். ஆனாலும் மனோரமாவை அறிமுகப்படுத்த முயற்சி செய்துள்ளார் கண்ணதாசன்.
இதன் காரணமாக தான் திரைக்கதை எழுதி தயாரித்த மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க மனோரமாவை அழைத்துள்ளார் கண்ணதாசன். ஆனால் ஊமையன் கோட்டை திரைப்படம் கைவிடப்பட்ட கோபத்தில் இருந்த மனோரமா கண்ணதாசன் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும் நீ ஹீரோயினாக நடித்தால் சில காலம் தான் நடிக்க முடியும். காமெடி வேடத்தில் நடித்தால் கடைசிவரை நிலைத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
கண்ணதாசனின் பேச்சை நம்பிய மனோரமா மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், மனேராமாவுக்கும் அடுத்து பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்பிறகு பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த மனேரமா திரையுலகில் பல சாதனைகளை செய்து இன்றும் நிலைத்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“