/indian-express-tamil/media/media_files/zPVHigKkgvnLK2NudwwC.jpg)
கவியரசர் கண்ணதாசன்
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்ப தேவர். எம்.ஜி.ஆரை வைத்து அதிகமான படங்களை தாயரித்த இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரும் கூட. அதேபோல் மருதமலை முருகனின் தீவிர பக்தரான இவர், தான் தயாரிக்கும் படங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை முருகன் கோவிலுக்கு கொடுத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதேபோல், தான் தயாரிக்கும் அனைத்து படங்களிலும், கடவுள் முருகனின் பொருள் வரும்படி, வேல், மயில், உள்ளிட்டவற்றை ஒரு காட்சியில் வைத்தால் தான் இந்த படத்தை எடுத்ததற்கான திருப்தி அவருக்கு கிடைக்கும். அதேபோல் தனது அனைத்து படங்களிலும் இதை கடைபிடித்து வந்த சின்னப்ப தேவருக்கு அக்கா தங்கை என்ற படத்தில் ஒரு சிக்கல் எழுந்தது.
1969-ம் ஆண்டு சின்னப்ப தேவர் தனது தேவர் பிலிம்ஸ் மூலம் தயாரித்த படம் அக்கா தங்கை. அவரின் சகோதரர் எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்த படத்தில், சவுக்கார் ஜானகி, கே.ஆர்.விஜயா, ஜெய்சங்கர், மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷங்கர் கணேஷ் இணையமைத்த இந்த படத்திற்கு கண்ணதாசன் மருதகாசி ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, தனது அடையாளங்களில் ஒன்றாக முருகனின் குறியீடுகள் வரவில்லையே என்று சின்னப்ப தேவர் ஏக்கத்தில் இருந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட கண்ணதாசன், கவலைப்படாதீங்க குறியீடு வச்சிடலாம் என்று சொல்ல, இனிமேல் எப்படி, முடியும் படப்பிடிப்பு முடிவடைய போகிறது என்று சின்னப்ப தேர்வு கூறியுள்ளார். அதற்குள் ஒரு பாடல் எழுதி சேர்ப்போம் என்று கண்ணதாசன் சொல்ல, சின்னப்ப தேவரும் சம்மதம் சொல்கிறார்.
அப்போது ஜெய்சங்கருக்கும் – கே.ஆர்.விஜயாவுக்கும் ஒரு கனவுக்காட்சி வைத்து காதல் பாடல் எழுதுகிறார் கண்ணதாசன். காதல் பாட்டில் முருகனை பற்றி எப்படி பாட முடியும் என்று சின்னப்ப தேவர் கேட்க, நான் வைத்து தருகிறேன் என்று கண்ணதாசன் எழுதிய பாடல் தான். ‘’ஆற்றங்கரையோ, தோட்டக்கலையே’’ என்ற பாடல். இந்த பாடலில் ஆடுவது வெற்றிமயில், மின்னுவது வேல் விழிகள், பாடுவது கோயில் மணியோசை என்று 3 வார்த்தைகளை சரணங்களாக வைக்கிறார்.
இந்த வார்த்தைகளை சின்னப்ப தேவருக்கு சுட்டிக்காட்ட அவரே மிக்க மகிழ்ச்சி கவிஞரே எனக்கான ஏக்கத்தை தீர்து்து வைத்துவிட்டீர்கள் என்று சொல்கிறார். கண்ணதாசனோ, ஜெய்சங்கர் கே.ஆர்,விஜயகாவை வர்ணிப்பது போல் பாடல் எழுதியிருந்த நிலையில், சின்னப்ப தேவர் தனது முருகன் பற்றி குறியீடுகள் படத்தில் வந்துவிட்டதாக நினைத்து சந்தோஷபட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.