அந்த நாள் ஞாபகம்... பாடலுக்காக ஸ்டூடியோவை சுற்றி ஓடிய டி.எம்.எஸ் : இதற்காக தானா?
1968-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் உயர்ந்த மனிதன். சிவாஜி கணேசன், சவுக்கார் ஜானகி இணைந்து நடித்த இந்த படத்தில், மேஜர் சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
தான் பாடும் பாடல் மிகவும் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடல் பதிவின்போது, அந்த ஸ்டூடியோவை சுற்றி ஓடிவிட்டு வந்து பாடியுள்ளார் டி.எம்.சௌந்திரராஜன். இது என்ன பாடல், எந்த படத்தில் இடம் பெற்றது என்பதை பார்ப்போம்.
Advertisment
1968-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் உயர்ந்த மனிதன். சிவாஜி கணேசன், சவுக்கார் ஜானகி இணைந்து நடித்த இந்த படத்தில், மேஜர் சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில், அசோகன், மனோரமா, சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல் பதிவுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஏவிஎம் சரவணன், படத்தின் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் ஒரு ஆங்கில படத்தை பார்த்துள்ளனர். அதில் ஹீரோ ஒரு வாக்கிங் ஸ்டிக் வைத்துக்கொண்டு பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் காட்சி இவர்களுக்கு மிகவும் பிடித்துவிட, அதேபோன்று ஒரு பாடலை தங்களது படத்தில் வைக்கலாம் என்று எண்ணி அதற்காக திரைக்கதையிர் மாற்றம் செய்துள்ளனர்.
அதேபோல் படத்திற்கான பாடல், இசைக்காக, எம்.எஸ்.வியிடம் இந்த படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்ல, படத்தை பார்த்த எம்.எஸ்.வி, அப்படி ஒரு பாடல் தானே பண்ணிடலாம் என்று சொல்லிவிட்டு, கவிஞர் வாலியை அழைத்து, பிரிந்த 2 நண்பர்கள் பல காலத்திற்கு பிறகு மீண்டும் சந்திக்கும்போது வரும் ஒரு பாடல், நீங்கள் எழுதிவிடுங்கள். அதன்பிறகு நான் டியூன் போடுகிறேன் என்று எம்.எஸ்.வி கூறியுள்ளார்.
அப்படி எழுதிய அந்த பாடல் தான் ‘’அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’’ என்ற பாடல். டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றும் ரசிக்கக்கூடிய ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது. இந்த பாடலை பாடுவதற்காக, மூச்சுவாங்க வேண்டும் என்பதால், பாடல் பதிவுக்கு முன்பாக எம்.எஸ்.வி ஸ்டூடியோவை சுற்றி 4 முறை ஓடி வந்துள்ளார் டி.எம்.சௌந்திராஜன்.
அதன்பிறகு ஓடிவந்த களைப்புடன் மூச்சு வாங்கி பாடிய டி.எம்.எஸ். இந்த பாடலை ஹிட் லிஸ்டில் இணைத்துள்ளார். குரலில் டி.எம்.எஸ். அசத்தியிருந்த நிலையில், இந்த பாடலுக்கான நடிப்பில் சிவாஜி கணேசன் சிறப்பாக நடித்து அசத்தியிருப்பார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“