கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றில், திருப்தி இல்லாத ஏ.ஆர்.ரஹ்மான், நள்ளிரவில் அவரை அழைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் அவரால் வர முடியாது என்பதால், அந்த பாடலுக்கான முதல் 2 வரிகளை ரஹ்மானே எழுதி அந்த பாடலை பதிவு செய்துள்ளார். இது என்ன படம்? என்ன பாடல் என்பதை பார்ப்போமா?
தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான படம் ஜோடி. சிம்ரன் நாயகியாக நடித்த இந்த படத்தின் மூலம் த்ரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் சிம்ரனின் தோழியாக ஓரிரு காட்சிகள் நடித்திருந்தார். மேலும், விஜயகுமார், நாசர், தனகராஜ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ரட்சகன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரவின் காந்தி இந்த படத்தை இயக்கியிருந்தார். படத்தின் அனைத்து பாடல்களையும், வைரமுத்து எழுதியிருந்தார். இந்த படத்தின் பணிகள் தொடங்கும்போது ரஹ்மான் பல படங்களில் பிஸியாக இருந்ததால், இந்த படத்திற்கு இசையமைக்க மறுத்துள்ளார். ஆனால், 1998-ம் ஆண்டு ரஹ்மான் இசையில் இந்தியில் வெளியான, ‘டோலி சாஜா கி ரஹானா’’ என்ற படத்தில் இருந்து 5 பாடல்களுக்கான டியூனை எடுத்துக்கொள்ளுமாறு இயக்குனர் கூறியுள்ளார்.
இந்த படம் மலையாளத்தில் வெளியான அனியத்தபரவு (தமிழில் காதலுக்கு மரியாதை) என்ற படத்தின் ரீமேக்காக ப்ரியதர்ஷன் இயக்கியிருந்தார். ஜோதிகா இந்த படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தின் இருந்து 5 டியூன்களும், மேற்கொண்டு 3 டியூன்கள் ரஹ்மான் தனியாக இசையமைத்து இந்த படத்தில் சேர்த்துள்ளார். இந்த படததில் வரும் ஒரு பொய்யாவது சொல் கண்ணே என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். ஆனால் இந்த பாடல் வரிகளில் அவ்வளவாக திருப்தி இல்லாத ரஹ்மான் நள்ளிரவு ஒரு மணிக்கு, வைரமுத்துவை அழைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால், அழைக்க முடியாத நிலையில், காலை 6 மணிக்கு ஆர்ட்டிஸ்ட் அனைவரும் வந்துவிடுவார்கள் என்பதால், ரஹ்மானே இந்த பாடலின் முதல் 2 வரிகளை மாற்றியுள்ளார். அதுதான் ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதல் நான்தான் என்று அந்த பொய்யில் உயிர் வாழ்வேன்’ என்ற வரிகள். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“