மே மாதம் படம் ரிலீஸ்: தயாரிப்பாளர் நெருக்கடியால் கண்ணதாசன் அவசரமாக கொடுத்த ஹிட் பாட்டு
1975-ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெயலலிதா, மஞ்சுளா, சந்திரபாபு, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அவன்தான் மனிதன். சிவாஜியை மனதில் வைத்து எழுத்தாளர் ஜி.பாலசுப்பிரமணியன் இந்த படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.
1975-ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெயலலிதா, மஞ்சுளா, சந்திரபாபு, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அவன்தான் மனிதன். சிவாஜியை மனதில் வைத்து எழுத்தாளர் ஜி.பாலசுப்பிரமணியன் இந்த படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.
மனிதனின் அத்தனை உணர்ச்சிகளையும் தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கவியரசர் கண்ணதாசன், மே மாதம் படம் வெளியிட வேண்டும் உடனே ஒரு பாடல் கொடுங்கள் என்று கேட்ட தயாரிப்பாளருக்கு தனது குறும்புத்தனத்தின் மூலம் சிறப்பான ஒரு வெற்றிப்பாடலை கொடுத்துள்ளார்.
Advertisment
1975-ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெயலலிதா, மஞ்சுளா, சந்திரபாபு, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அவன்தான் மனிதன். சிவாஜியை மனதில் வைத்து எழுத்தாளர் ஜி.பாலசுப்பிரமணியன் இந்த படத்திற்கான கதையை எழுதியுள்ளார். இந்த கதையை வாங்கிய ஒரு தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் சிவாஜியை வைத்து படம் தாயரிக்கலாம என்று முடிவு செய்து சிவாஜியை சந்தித்து கதை கூறியுள்ளனர்.
இந்த படத்தின் கதையை கேட்ட சிவாஜி, இப்போது நான் உச்சத்தில் இருக்கிறேன். சோகமாக முடியும் இந்த படத்தின் கதையில் நான் நடிக்க வேண்டுமா முடியாது என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பட தயாரிப்பு நிறுவனம் இந்த கதையை விற்றுவிடலாமா என்று யோசித்தபோது, கன்னடத்தில் சிவாஜியின் தீவிர ரசிகரான ஒருவர், இந்த கதையை வாங்கியுள்ளார். இவர் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.
1971-ம் ஆண்டு கஸ்தூரி நிவாசா என்ற பெயரில் வெளியான இந்த படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதன்பிறகு மற்ற மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், படத்தை பார்த்த சிவாஜி இந்த கதையை மிஸ் செய்துவிட்டோமே என்று நினைத்து அதன் ரீமேக்கில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த படம் தான் அவன்தான் மனிதன். ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
Advertisment
Advertisements
படத்தை மே மாதம் கோடை விடுமுறையில் வெளியிட விரும்பிய படக்குழ, அதற்குள் படத்தில் மேலும் ஒரு பாடலை சேர்க்க முடிவு செய்துள்ளனர். ஆனால் படத்திற்கு அவர்கள் சொன்ன பாடல்களை எழுதிய கண்ணதாசன், தனது அடுத்த வேலைகளை பார்க்க சென்றுவிட்டதால், படத்தில் மேலும் ஒரு பாடலை சேர்க்க வேண்டும், இந்த பாடலை மலர் கண்காட்சியில் தான் ஷூட்டிங் செய்ய வேண்டும் உடனடியாக ஒரு பாடலை எழுதி கொடுங்கள் என்று கண்ணதாசனிடம் சொல்ல, அவரே 2 நாட்களில் எழுதி தருகிறேன் என்று கூறியுள்ளார்.
அப்போது கண்ணதாசன் பிஸியாக இருந்ததால், இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பலரும் அவரை சந்தித்து மே மாதம் படத்தை வெளியிட வேண்டும் என்று சொல்லி சொல்லி பாடலை கேட்டுள்ளனர். அப்படி ஒருநாள், எம்.எஸ்.வி போன் செய்ய, ஏர்போர்ட்டுக்கு சென்றுகொண்டிருந்த கண்ணதாசன், அவரை வந்து சந்தித்போது, அதே மே மாதம் படம் வெளியீடு பாடல் வேண்டும் என்று எம்.எஸ்.வி சொல்ல, ஏன்டா விசு எப்ப பார்த்தாலும் மே மே என்று ஆடு மாதிரி கத்திட்டு இருக்கீங்க என்று கேட்டுள்ளார்.
அதன்பிறகு இப்ப என்ன உங்களுக்கு பாட்டு தானே வேணும் எழுதிக்கோங்க என்று பாடல் வரிகளை கூறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் பாடலை எழுதி முடித்துள்ளனர். படக்குழு அனைவரும் மே மாதத்தை நினைவுபடுத்தியதால், இந்த பாடலில் அனைத்து வரிகளும் மே என்ற எழுத்தில் முடிவது போல் கண்ணதாசன் எழுதியிருப்பார். அந்த பாடல் தான். ‘’அன்பு நடமாடும் கலைக்கூடமே’’ என்ற பாடல். இந்த பாடலை பார்த்த அனைவருமே கவிஞரின் குறும்புத்தனத்தை ரசித்துள்ளனர். இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“