கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரி அபசகுணமாக இருக்கும் இதை மாற்றுங்கள் என்று ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சொல்லியும், கண்ணதாசன், இது மக்களுக்கு பிடிக்கும். இது வேண்டாம் என்றால் நான் இந்த பாடலே எழுதவில்லை என்று சொல்ல, அதன்பிறகு அரைமனதுடன் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அந்த பாடலை ஒப்புக்கொள்கிறார். அந்த பாடல் என்ன? அந்த பாடல் வெற்றி பெற்றதா?
Advertisment
1962-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பார்த்தால் பசி தீரும். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, சரோஜா, சௌவுக்கார் ஜானகி, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், கமல்ஹாசன் குமார் பாலு என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படத்திற்கு, ஏ.சி.திரிலோகச்சந்தர் கதை எழுத, ஏ.வி.எம்.நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார்.
சிவாஜியும், ஜெமினியும் ராணுவத்தில் வேலை செய்து வரும் நிலையில், அங்கு நடத்த ஒரு போரில் குண்டடிப்பட்டு இருவரும் ஒரு மலை கிராமத்தில் தஞ்சம் அடைகின்றனர். அப்போது அந்த கிராமத்து பெண்ணான சாவித்ரியை காதலித்து ஜெமினி கணேசன் திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், அடுத்து நடந்த போரில், ஜெமினி, சிவாஜி இருவரும் அந்த கிராமத்தில் இருந்து தப்பிக்கும்போது பிரிந்து சென்றுவிடுகின்றனர். சில மாதங்கள் கழித்து ஜெமினி கணேசன் தனது மனைவியை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறார்.
கிராமத்தில் இருப்பவர்கள், குண்டுவெடிப்பில் அனைவரும் இறந்துவிட்டதாக சொல்ல விரக்தியில் சென்னை வரும் ஜெமினி கணேசன், உறவினர்களின் வற்புறுத்தலால் சௌவுக்கார் ஜானகியை திருமணம் செய்துகொள்வார். ஜெமினி என்ன ஆனார் என்பதை தெரிந்துகொள்ள மீண்டும் அந்த கிராமத்திற்கு வரும் சிவாஜி கணேசன், இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட சாவித்ரி கண்பார்வை இல்லாமல், ஜெமினியின் குழந்தையுடன் இருப்பதை பார்த்து, ஜெமினியுடன் சேர்தர்து வைக்க அவரை அழைத்து வருகிறார்.
Advertisment
Advertisements
இங்கு ஜெமினிக்கு வோறரு திருமணம் ஆகிவிட்டது அவரிடம் சாவித்ரி உயிருடன் இருக்கிறார் என்பதையும் சொல்ல முடியாது. அதேபோல் கண் தெரியாத சாவித்ரியிடமும் ஜெமினிக்கு வேறு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்ல முடியாது இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சிவாஜி விழித்துக்கொண்டிருப்பார். அதே சமயம் சௌகார் ஜானகியின் தங்கையான சரோஜா தேவி மீது சிவாஜிக்கு காதல் இருக்கும். ஆனால் கண் தெரியாத சாவித்ரி, சிவாஜியின் மனைவி என்று நினைத்துக்கொள்ளும் சௌகார் ஜானகி சிவாஜியை திட்டி விடுகிறார்.
எங்கும் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் சிவாஜி கணேசன் ஒரு கட்டத்தில் அழுது புலம்பி பாடும்படியான ஒரு பாடல் தான் ‘’உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை’’. இநச்த பாடல் அனைவருக்கும் பிடித்துவிடுகிறது. ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கும் பிடிததுவிட, அவர் பல்லவியில் ஆமை ஊமை என்று அபசகுணமாக இருக்கிறது இதை மாற்ற சொல்லுங்கள் என்று சொல்கிறார். ஆனால் கண்ணதாசன், இது மக்களுக்கு பிடிக்கும் மாற்ற வேண்டாம் என்கிறார்.
இதை கேட்டு கோபமான ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நான் சொன்னால் நீங்கள் மாற்ற வேண்டியதானே, இந்த பல்லவி எனக்கு பிடிக்கவில்லை என்று கண்ணதாசனிடம் சொல்ல, ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பல்லவியை மாற்ற வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் கண்ணதாசன், இந்த பாட்டுக்கு இதுதான் பல்லவி. அதை மாற்ற வேண்டும் என்றால் இந்த பாடலே வேண்டாம். வேறு யாரையாவது வைத்து எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார். அதன்பிறகு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அரைமனதுடன் ஒப்புக்கொள்கிறார்.
இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இன்றும் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது.