தென்னிந்திய சினிமாவின் பெண் சூப்பர் ஸ்டார் என்று பெயரேடுத்த நடிகை பானுமதி கால் மேல் கால் போட்டு அமர்ந்தை தவறு என்று தன்னிடம் சொன்ன ஒருவருக்கு, என்.எஸ்.கிருஷ்ணன் தனத பாணியில் தரமான ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர், பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி நாகர்கோவிலில் பிறந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள என்.எஸ்.கிருஷ்ணன், கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்தார்.
மேலும், தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்திய என்.எஸ்.கே நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். அதேபோல் சக நடிகர் நடிகைகளுடன் அன்பாகவும், நட்புடனும் பழகும் வழக்கத்தை வைத்திருந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். சினிமாவில் பல பஞ்சாயத்துகளை தீர்த்து வைக்கும் அளவுக்கு பிரபலமான இருந்துள்ளார். அவரை போல் சினிமாவில் அனைத்து துறைகளையும் கற்று தேர்ந்தவர் தான் நடிகை பானுமதி. நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட அவர், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
என்.எஸ்.கே – பானுமதி இருவரும் இணைந்து நடித்த படம் நல்ல தம்பி. அறிஞர் அண்ணா, கதை திரைக்கதை எழுதிய இந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு இந்த படத்தை இயக்கினர். இந்த படத்தை தயாரித்த என்.எஸ்.கிருஷ்ணன் அதில் நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, ஒரு நாள் நடிகை பானுமதி தனது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்துள்ளார். இதை பார்த்த ஒருவர் என்.எஸ்..விடம் சென்று, பாருங்க அந்த அம்மா கால் மேல் கால்போட்டு உட்கார்ந்திருக்காங்க என்று கூறியுள்ளார். இதை கேட்டு கடுப்பான என்.எஸ்.கே, அந்த அம்மா என்ன உன் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறாங்களா?
அவங்க கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்காங்க, இதில் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க, அந்த நபர் அதன்பிறகு வாயவே திறக்கவில்லை என்று நடிகர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். சக நடிகர் நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பதில், என்.எஸ்.கே ஒரு முக்கிய நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.