தமிழ் சினிமாவில் சில காலமே நடித்திருந்தாலும், தனது நடிப்பின் மூலம் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவரான சந்திரபாபு, தன்னை கிண்டல் செய்த எம்.எஸ்.வியை, எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் பதிவின்போது பழி தீர்த்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், கதாசிரியர் என பன்முக திறமையுடன் வலம் வந்த சந்திரபாபு, பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்டாவராக இருந்துள்ளார். பழம்பெரும் நடிகர், டி.ஆர்,மகாலிங்கம் 1947-ம் ஆண்டு வெளியான தனா அமராவதி என்ற படத்தில் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளர். அதன்பிறகு 1951ம் ஆண்டு மோகன சுந்தரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
டி.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பு இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சின்னதுரை படத்தில், டி.ஜி.லிங்கப்பா இசையில், சந்திரபாபு ஒரு பாடலை பாடியிருந்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக யூட்லிங் பாடலை பாடியதும், ஆங்கில பாடலை பாடியதும் சந்திரபாபு தான். அதேபோல் முதல் வெஸ்டர்ன் பாடல்களை பாடியதும் அவர்தான். இப்படி பல திறமைகளை கையில் வைத்திருந்த சந்திரபாபு சில படங்களுக்கு கதையும் எழுதியள்ளார்.
பல திறமைகளை உள்ளடக்கிய ஒருவராக இருந்த சந்திரபாபு, தொடக்க காலத்தில் வாய்ப்பு தேடி அலையும்போது, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் பாடல் பாட வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். அப்போது அவரிடம் உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், சந்திபாபுவை பாட சொல்லி கேட்டுக்கொண்டு இருக்க, அங்கே வந்த சுப்பையா நாயுடு, என்ன பாடினானா என்று கேட்க, எங்க பாடினான், பேசிக்கிட்டேதான் இருக்கிறான் என்று கூறியுள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்ட சந்திரபாபு நேரம் பார்த்து எம்.எஸ்.வியை பழி தீர்த்துள்ளார்.
1955-ம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான குலேபகாவலி திரைப்படத்தில், எம்.ஜிஆர் நாயகனாக நடிக்க, அவருடன் சந்திரபாபு நடித்திருந்தார். இந்த படத்தில் சந்திரபாபு பாடி நடிக்க வேண்டிய ஒரு காட்சியில், பாடல் பதிவு நடந்துள்ளது. அப்போது எம்.எஸ்.விஸ்வநாதன், சந்திரபாபுவுக்கு பாடல் சொல்லிக்கொடுத்துள்ளார். அதன்பிறகு எம்.எஸ்.வி பாட்டு எப்படி இருக்கு என்று கேட்க, ஓஹோ நீங்க பாடுநீங்களா நான் பேசுனீங்கனு நினைத்தேன் என்று சந்திரபாபு சொல்ல, எம்.எஸ்.விக்கு அவர் ஏன் அப்பா சொல்கிறார் என்பது புரிந்தது. அதன்பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“