சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் திரைப்படத்தில் இருப்பது போலவே தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கமாட்டார்கள் என்பதை எடுத்து சொல்லும் ஒரு படத்தில் நடிப்பதற்காக பல நடிகர்கள் தயங்கிய நிலையில், நடிகர் ஜெய்சங்கர் தைரியமாக அந்த படத்தில் நடித்து படத்தை வெற்றிப்படமாக்கினார்.
1971-ம் ஆண்டு இந்தியில் வெளியான படம் குட்டி. தர்மேந்திரா, ஜெயா பதூரி (அமிதாப் பச்சன் மனைவி) ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கவியரசர் கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிசாவன் அந்த படத்தின் உரிமையை வாங்கியுள்ளார். ஆனால் இந்த கதையை அவரால் படமாக்க முடியவில்லை.
அந்த காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் செல்வாக்க மிக்க தயாரிப்பாளராக இருந்த ஏ.எல்.சீனிவாசனாலே இந்த படத்தை அவ்வளவு எளிதாக படமாக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், அந்த படத்தை இயக்குவதற்கும், அதில் நடிப்பதற்கும் பல நட்சத்திரங்கள் பயந்தனர். இது ஒரு சினிமா தொடர்பான படம். இந்த படத்தில் நடித்தால், படத்தில் வரும் நாயகனாக எம்.ஜி.ஆரை சுட்டிக்காட்டும் வகையில் அமையும் என்று பலரும் பயந்துள்ளனர்.
இதை பற்றி துளியும் கவலைப்படாத இயக்குனர் முக்தா சீனிவாசன், இது ஒரு நல்ல கதை. சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜெய்சங்கர் இந்த படத்தில் நடிகர் ஜெய்சங்கராகவே நடித்திருந்த நிலையில், அவரை காதலிக்கும் ஒரு ரசிகை பெண்ணாக நடிகை ஜெயசித்ரா நடித்திருந்தார். சங்கர் – கணேஷ் இசையமைத்த இந்த படத்திற்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார்.
சினிமா பைத்தியம் என்ற பெயரில் முக்தா சீனிவாசன் இயக்கிய இந்’த படத்தில், சிவாஜி கணேசன், செந்தாமரை, ஜெயலலிதா, இயக்குனர்கள் கே.பாலாஜி, பீம்சிங், உள்ளிட்ட பலர் தங்கள் நிஜ கேரக்டர்களாகவே படத்தில் நடித்திருந்த நிலையில், ஜெயசித்ராவுக்கு பார்த்த மாப்பிள்ளையாக கமல்ஹாசன் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த சினிமா பைத்தியம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“