Advertisment

வாலியின் வரிகளால் வாய்ப்பு பெற்ற தேவா: ப்ரொடியூசரை கூல் செய்த அந்தப் பாட்டு

வைதேகி கல்யாணம், வசந்தகால பறவை, தெற்கு தெரு மச்சான், உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த தேவா, 1992-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை படத்திற்கு இசையமைத்திருந்தார்.

author-image
WebDesk
New Update
deva vali

கவிஞர் வாலி - இசையமைப்பாளர் தேவா

தமிழ் சினிமாவின் முன்னணி இசைமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் தேவா. 1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், 1989-ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக உருவெடுத்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றிருந்தார்.

Advertisment

தொடர்ந்து, வைதேகி கல்யாணம், வசந்தகால பறவை, தெற்கு தெரு மச்சான், உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த தேவா, 1992-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து 1995-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் எவர்கிரீன் ஹிட் படமாக பாட்சா படத்திற்கும் இசையமைத்திருந்தார்.

தற்போதைய காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு அவரது டைட்டில் கார்டில் வரும் இசை தேவாவின் இசைதான். அதேபோல் அஜித்தின் ஆசை, வாலி, விஜயின் குஷி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த தேவா, பாடகராகவும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். கடைசியாக இவரது இசையில் கடந்த ஆண்டு வா வரலாம் வா என்ற படம் வெளியானது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களுக்கும் தேவா இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும், முத்திரை பதித்துள்ள தேவா, முதன் முதலில் கார்த்திக் நடிப்பில் வெளியான நீலக்குயிலெ நீலக்குயிலே படத்திற்காக இசையமைப்ப கமிட் ஆகியுள்ளார். 2 தயாரிப்பாளர்கள் தயாரித்த இந்த படத்தில். மூத்தவருக்கு தேவா இசையமைப்பது பிடிக்கவில்லை. ஆனாலும் மற்றொரு இசையமைப்பாளர் தேவா இசையமைத்தால் நான்றாக இருக்கும் என்று கூறியதால்,விருப்பம் இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும் தேவா டியூன் அனைத்தையும் அவர் வேண்டாம் என்றே சொல்லி வந்துள்ளார்.

இதனிடையே ஒருநாள் தேவா போட்டி டியூனை வேண்டாம் என்று கூறிய அந்த தயாரிப்பாளர், நாளை கவிஞர் வாலி வருகிறார். உன் தலையெழுத்து அன்றுதான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் வந்த வாலி, எங்கே டியூனை வாசியுங்கள் என்று கேட்க, தேவாவும் அந்த டியூனை வாசித்துள்ளார். இதை கேட்ட வாலி, ரொம்ப நல்லாருக்கே என்று சொல்லிவிட்டு ‘’ஆரம்பம் நல்லாருக்கு வயலெல்லாம் நெல்லா இருக்கு’’ என்று பாடல் எழுத அந்த தயாரிபாளர் அதன்பிறகு தேவா இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தேவா வாலிபகவிஞர் வாலி என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment